Tamilnadu
போதைப்பொருள் கடத்தல் வழக்கு : எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை திமுகவுடன் தொடர்புபடுத்தி தி.மு.க கட்சியின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உள் நோக்கதுடன் பேசி வரும் எடப்பாடி பழனிச்சாமி ஒரு கோடி மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட கோரி தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக-வை தொடர்புபடுத்தி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்கவும் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இந்த இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது அப்போது, ஆர்.எஸ் பாரதி தரப்பில் வழக்கறிஞர் மனுராஜ் ஆஜராகி வாதம் வைத்தனர். பின்னர் நீதிபதி, வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்க உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கை டிச.3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Also Read
-
29 மாவட்டங்கள் - 141 அரசுப் பள்ளி : 754 புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
பறக்க தயாராக இருந்தபோது இயந்திர கோளாறு : உயிர் தப்பிய 172 பயணிகள் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
-
“சிலை திருட்டு என்பது வெகுவாக குறைந்துள்ளது” - அமைச்சர் சேகர்பாபு பேட்டி !
-
திராவிட மாடல் திட்டத்தால் உயர்கல்வியில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை : தமிழ்நாடு அரசு!
-
”மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று எங்களுக்கும் தெரியும்” : ஒன்றிய அரசிடம் காட்டமாக சொன்ன உச்சநீதிமன்றம்!