Tamilnadu
”ஒவ்வொரு குடும்பத்தையும் எட்டிப் பார்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (7.11.2024) தஞ்சாவூர் மாவட்டம், பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.43.58 கோடி செலவில் முடிவுற்ற 127 திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.28.26 கோடி மதிப்பீட்டிலான 2 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 14,525 பயனாளிகளுக்கு ரூ.154 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "தஞ்சை மாவட்டத்தில் நடைபெறுகின்ற இந்த அரசு விழாவில் சுமார் 15 ஆயிரம் பயனாளிகளுக்கு 154 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்குதில் நான் மிகுந்த கிழ்ச்சியடைகின்றேன். கடந்த 3 நாட்களாக விழுப்புரம், திருச்சி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இன்று தஞ்சைக்கு உங்களையெல்லாம் சந்திக்க வந்துள்ளேன்.
இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்டத்தில் 1,000 மகளிர் சுய தவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கு சுமார் 68 கோடி ரூபாய் அளவிற்கு ங்கிக் கடன் இணைப்புகளை வழங்கயிருக்கின்றோம். சுமார் 850 பேருக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத்தின் மூலம் பணி நியமன ஆணைகளை வழங்க இருக்கின்றோம். 80 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, சமூக நலத்துறை என நம்முடைய திராவிட டல் அரசினுடைய பல்வேறு துறைகளின் சார்பாக, அனைத்து விதமான நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு கொடுக்க இருக்கின்றோம்.
உங்களுடைய ஒவ்வொருவருடைய முகங்களையும் காணும்போது, எனக்கு மிகுந்த நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும், உற்சாகமும் ஏற்படுகின்றது. நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் எட்டிப் பார்க்கின்றது. மாவட்டம், ஒன்றியம், நகரம் என்றில்லாமல், ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு குடும்பத்திலுள்ள தனி மனிதருக்கும், தேவையான திட்டங்களை நம்முடையமுதலமைச்சர் அவர்கள் பார்த்து, பார்த்து வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய மகிழ்ச்சிதான் இந்த திட்டங்களுடைய வெற்றிக்கு ஒரே சாட்சியாகும்.
குறிப்பாக இங்கு நிறைய மகளிர் வருகை தந்துள்ளீர்கள். மகளிர் ஆண்களுக்கு நிகராக மட்டுமல்ல, ஆண்களைவிடவும் பல்வேறு உயரங்களை தொடவேண்டும் என்றுதான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே முதன்முறையாக மகளிர் சுய உதவிக்குழுக்களை தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்கள்.
நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு கடந்த மூன்றரை ஆண்டுகளில் 95,176 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக்கடன் இணைப்புகளை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கி இருக்கின்றார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் இன்றைக்கு இந்த மேடையில் சுமார் 1,000 குழுக்களுக்கு 68 கோடி ரூபாய் அளவிற்கு வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்த வங்கிக் கடன் இணைப்புகளையெல்லாம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உங்களுக்கு கொடுக்கக் கூடிய கடன் தொகையாக பார்க்கவில்லை. மாற்றாக சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் உங்களுடைய உழைப்பின் மீது இருக்கக் கூடிய நம்பிக்கையாகத்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பார்க்கின்றார்கள். அதுமட்டுமல்ல மகளிருடைய உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக அவர்களுடைய பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்திட வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திட்டங்களை இந்த மூன்றரை ஆண்டுகளில் தந்திருக்கின்றார்கள். ஆட்சிப் பொறுப்பை ஏற்றதுமே முதல் கையெழுத்து பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்காக விடியல் பயணத்திட்டத்தை செயல்படுத்தினார்கள்.
இந்த திட்டத்தின் காரணமாக ஒவ்வொரு மகளிரும் மாதம் 1,000 ரூபாய் வரை சேமிக்கின்றார்கள். அதேபோல் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் படித்து, உயர்கல்வியில் சேருகின்ற ஒவ்வொரு மாணவிக்கும் மாதம் தலா 1,000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் இத்திட்டத்தின் மூலம் 3 லட்சம் மாணவிகள் பயனடைந்து வருகின்றார்கள். மாணவிகளுக்கு மட்டுமல்ல. மாணவர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்க தமிழ் புதல்வன் திட்டம். மகளிர் காலையில் மகளிர் எழுந்து குழந்தைகளுக்கு உணவு சமைக்க சிரமப்படக் கூடாது என்பதற்காக இந்தியாவிலேயே முதன்முறையாக காலை உணவுத்திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் துவங்கி வைத்தார்கள்.
இத்திட்டத்தின் மூலம் அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 வகுப்புவரை பயிலும் 20 லட்சம் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பயனடைந்து வருகின்றார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் மாதா, மாதம் 1,000 ரூபாய் பெற்று வருகின்றார்கள். நம்முடைய திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்கு பல்வேறு திசைகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்திய அளவில் கல்வி, சுகாதாரம், நகர்புர மேம்பாடு, மகளிர் பாதுகாப்பு, மகளிர் முன்னேற்றம் என 13 துறைகளில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருக்கின்றது என்று நான் கூறவில்லை. ஒன்றிய அரசினுடைய நிதிஆயோக் அமைப்பின் பட்டியல் தெரிவிக்கின்றது. அதேபோல தொழில் துறையில் சிறந்து விளங்குகின்ற மாநிலம் என்ற பட்டியலிலும் நம்முடைய மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவிலேயே பணிக்கு, வேலைக்கு செல்கின்ற பெண்கள் 42 சதவீதம் உள்ள மாநிலமாக நம் தமிழ்நாடு உள்ளது என்பது நமக்கு கூடுதல் பெருமையாகும். நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அவருடைய கனவுத்திட்டம் நான் முதல்வன் திட்டத்தை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் மேலாக டெல்டா பகுதிகளில் தொழில் வளர்ச்சியை பரவலாக்கிட வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிசெய்திட 2023 ல் டைடல் நியோ தொழில்நுட்ப பூங்கா அமைத்திட அறிவித்தார்கள். சென்னைக்கு வெளியே அறிவிக்கப்பட்ட முதல் தொழில் நுட்ப பூங்கா தஞ்சை மாவட்டத்திற்குதான். ஜீன் 2023 ல் தொடங்கப்பட்ட கட்டுமான பணி, 15 மாதங்களில் முடிக்கப்பட்டு, முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. திறந்து வைக்கப்பட்ட 10 மாதங்களிலேயே பல்வேறு நிறுவனங்களின் வருகையால் நிறைந்து விட்டது தஞ்சை டைடல் நியோ பூங்கா. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 600 பேருக்கு இப்பகுதியிலேயே வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தின் முதல் தொழில் பூங்கா சிப்காட் செங்கிப்பட்டியில் அமைக்க அறிவிக்கப்பட்டுள்ளது. 172 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த சிப்காட்டிற்கான முதல் கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதன் மூலம் 30,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்த திட்டங்களையெல்லாம பெறுகின்ற உங்களை தமிழ்நாடு அரசு பயனாளிகளாக பார்க்க வில்லை. பங்கேற்பளார்களாக பார்க்கின்றது.
நம்முடைய திராவிட மாடல் அரசின் திட்டங்களை, சாதனைகளை நீங்கள் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். இந்த திராவிட மாடல் அரசினுடைய முகங்களே மக்களாகிய நீங்கள்தான். நீங்கள்தான் இந்த அரசின் பிராண்ட் அம்பாசிடர்ஸ்.
உங்களுக்காக உழைத்திட, நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்திட நாங்கள் எப்போதும் தயாராக இருப்போம் என்று கூறிக்கொள்கின்றேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!