Tamilnadu
”திமுக கொடி பறக்கும் வரை தமிழ்மொழியை எவராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது” : துணை முதலமைச்சர் உதயநிதி
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவு வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தஞ்சை மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் இன்று தஞ்சை மத்திய மாவட்டம், திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கண்டியூரில் தி.மு.கழகத்தின் கருப்பு - சிவப்புக் கொடியை ஏற்றிவைத்தார்.
மேலும் தஞ்சாவூர் மத்திய மாவட்டம், திருவையாறு தெற்கு ஒன்றியம், கோனேரிராஜபுரம் - கருப்பூரில் கழகத்தின் இருவண்ண கொடியை ஏற்றி வைத்து, பேரறிஞர் அண்ணா - முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவுருவச்சிலைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இதனைத் தொடர்ந்து தி.மு.க. கொடி பறக்கும் வரை தமிழ்நாட்டை எவராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என சமூகவலைதளத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், நம் கழகக் கொடி பறக்கும் வரை, கழக உடன்பிறப்புகள் இருக்கும் வரை தமிழ்நாட்டையும், தமிழ்மொழியையும், எவராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மகனின் திருமணத்தின் போது மாரடைப்பால் உயிரிழந்த கோவை செல்வராஜ் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
29 மாவட்டங்கள் - 141 அரசுப் பள்ளி : 754 புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
பறக்க தயாராக இருந்தபோது இயந்திர கோளாறு : உயிர் தப்பிய 172 பயணிகள் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
-
“சிலை திருட்டு என்பது வெகுவாக குறைந்துள்ளது” - அமைச்சர் சேகர்பாபு பேட்டி !
-
திராவிட மாடல் திட்டத்தால் உயர்கல்வியில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை : தமிழ்நாடு அரசு!