Tamilnadu

திராவிட மாடல் அரசின் புரட்சித் திட்டம் : தினத்தந்தி தலையங்கத்தை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பெருமிதம்!

தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை பாராட்டி தினத்தந்தி நாளேடு தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அதில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 1,343 ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்த புதிய தொழில் முனைவோரும், ஏற்கனவே தொழில் முனைவோராக இருப்பவர்களும் புதிய தொழில்களை தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் என்று ரூ.124.64 கோடியை முதலீட்டு மானியமாக பெற்றிருக்கிறார்கள். இதில் 288 பேர் பெண்கள் என்பது மிகவும் பெருமைக்குரியது. இந்த திட்டத்தின் பயனை பெறுவதற்கு கல்வி தகுதி எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். வயதுவரம்பு மட்டும் 55 வயது என்று கூறப்பட்டுள்ளது. ஆக, ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்த யாரும், அது படித்தவர்களாக இருந்தாலும் சரி, படிக்காதவர்களாக இருந்தாலும் சரி புதிய தொழில்களை அரசு வழங்கும் மானியத்துடன் தொடங்க முடியும்.

அரசின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. இதுபோல, அனைத்து இளைஞர்களும் வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாமல், தொழில் தொடங்கி மற்றவர்களுக்கும் வேலை கொடுப்பவர்களாக உயரும் வகையில் வாய்ப்புகளை வழங்க, இதுபோன்ற சலுகைகளை வழங்கினால் வேலையில்லா திண்டாட்டமும் மறையும், தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்பார்க்கும் தொழில் வளர்ச்சியையும் வேகமாக அடையமுடியும்” என பாராட்டியுள்ளது.

இந்நிலையில், தினத்தந்தி தலையங்கத்தை சுட்டிக்காட்டி அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் திராவிட மாடல் அரசின் புரட்சித் திட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பெருமையுடம் தெரிவித்துள்ளார்.

அவரது சமூகவலைதள பதிவில், “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” - ஆதிதிராவிடர் – பழங்குடியின மக்களில் இருந்து தொழில்முனைவோர்களை உருவாக்கிடும் திராவிட மாடல் அரசின் புரட்சித் திட்டம்!

இதுவரையில்,

✅ பயனாளிகள் - 1988

✅ கடன் - ரூ.453 கோடி

✅ மானியம் - ரூ.230 கோடி

தினத்தந்தி தலையங்கத்தின் ந்தத் தலையங்கம் நமது பணிகளுக்கான ஊக்கம் என்றாலும்; இதன் நோக்கம் தேவையுள்ள மக்களுக்கு முழுதாகச் சென்றடைய, விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் அனைவரும் இதனைப் பயன்படுத்திக்கொண்டு உயரவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: இவர்கள் இனி தொழில் அதிபர்கள் : அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை பாராட்டிய தினத்தந்தி நாளேடு