Tamilnadu
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் : 2ஆம் சுற்று முடிவில் 3,4 இடங்களில் இந்திய வீரர்கள்!
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கத்தில், சென்னை கிரான்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் பிரிவுகளின் 2வது சுற்று போட்டிகள் நடைபெற்றது.
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் - மாஸ்டர்ஸ் பிரிவு 2 வது சுற்று ஆட்டத்தில் ஈரானை சேர்ந்த அமீன் தபேதிபாய் - செர்பியாவின் சரணா அலெக்ஸி உடன் வெள்ளை நிற காய்களுடன் மோதி தனது 44 வது நகர்வில் வெற்றி பெற்றார்.
அடுத்ததாக ஈரான் வீரர் மக்சூட்லூ பர்ஹாம் - இந்தியாவின் விதித் சந்தோஷ் குஜராத்தி உடன் வெள்ளை நிற காய்களுடன் விளையாடி தனது 44 வது நகர்வில் வெற்றி பெற்றார்.
தொடந்து விளையாடிய இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, அமெரிக்காவின் வீரரான அரோனியன் லெவன் இடையேயான ஆட்டம் மற்றும், இந்தியாவின் அரவிந்த சிதம்பரம், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வச்சியர் லாக்ரேவ் மாக்சிம் ஆகியோரின் ஆட்டம் சமனில் முடிந்தது.
மாஸ்டர்ஸ் பிரிவின் இரண்டு சுற்று போட்டிகள் முடிவில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வச்சியர் லாக்ரேவ் மாக்சிம் 1.5 புள்ளிகள் உடன் முதல் இடத்திலும், ஈரானை சேர்ந்த அமீன் தபேதிபாய் 1.5 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 1.5 புள்ளிகள் உடன் 3 வது இடத்திலும் உள்ளனர்.
தான் விளையாடிய இரண்டு சுற்றுகளிலும் போட்டியை டிரா செய்ததால், தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் 1.0 புள்ளிகள் உடன் 4 வது இடத்தில் தொடர்கிறார்.
Also Read
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!