Tamilnadu
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது கூடலூர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆர்கிடேரியங்கள் (Orchidariums) 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என அப்போதைய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு வெளியிட்டார். இதனை செயல்படுத்தும் வகையில் தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
குறிப்பாக, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆர்க்கிட் (Orchid) காட்சி அறை, ஆர்கிடேரியத்தை சுற்றி ஏற்கனவே உள்ள சூரிய மின் வேலியை பராமரித்தல், தற்போதுள்ள புகைப்படக் காட்சி அறையை SMART ஆக மேம்படுத்துதல், பாதுகாப்புக் கல்வியில் சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விளக்க மையம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதேபோல், கூடலூர் வனப் பிரிவு, நாடுகானி மலைத்தொடரின் ஜெனிபூல் தோட்டத்தில் விளக்க மையத்துடன் கூடிய ஆர்க்கிட் அருங்காட்சியகம், ஆர்க்கிட் விர்ச்சுவல் ரியாலிட்டி மையம், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உள்ளூர் மல்லிகைகளின் கண்ணாடி காட்சி, ஆர்க்கிட்களின் சேகரிப்பு மற்றும் ஆவணப்படுத்தல்,மேற்குத் தொடர்ச்சி மலையின் ஆர்க்கிட் வழிகாட்டியைத் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் தேவைக்காகவும் உள்ளூர் சமூகத்திற்கு ஆர்க்கிட் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை புரிய வைக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !