Tamilnadu
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கோயம்புத்தூர், தங்க நகை சார்ந்த கைவினைப் பொருட்களுக்கு புகழ்பெற்றது மட்டுமல்லாமல் இக்கைவினை பொருட்களின் தனித்தன்மையின் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாடு சந்தைகளில் அதிகம் விரும்பப்படுகிறது. இங்கு சுமார் 2,000 முறையான நகை தயாரிப்பு கூடங்கள் மற்றும் சுமார் 40,000 வீட்டிலேயே அமையப்பெற்ற நகை தயாரிப்பு கூடங்கள் செயல்பட்டு, அவற்றின் வாயிலாக 1,50,000 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். பெரும்பாலான கூடங்கள் பாதுகாப்பின்மை, உற்பத்தி அளவை அதிகரிப்பதற்கான முறையான கடன் பெறுவதில் சிரமம், சோதனை வசதியின்மை போன்ற சிக்கல்களை எதிர்கொள்கின்றன.
இந்நிலையில், இன்று கோயம்புத்தூரில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை, கோயம்புத்தூர் தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கம், கோயம்புத்தூர் தங்க நகைக்கடை சங்கம், தங்கபொன் சங்கம் (Gold Bullion’s Association), கோயம்புத்தூர் பொற்கொல்லர் கவுன்சில், கோயம்புத்தூர் கைவினைஞர்கள் தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கம், சான்றளிக்கப்பட்ட பொற்கொல்லர் சங்கம். தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை, சுவாமி விவேகானந்தா கலாச்சார சங்கம், டைமண்ட் இந்தியா, ராயல் பெங்கால் சங்கம், டி.எம்.கே. தங்க நகை உற்பத்தியாளர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர் நல சங்கம். கோயம்புத்தூர் பொற்கொல்லர் சங்கம், தென் மாவட்ட மாநாட்டு வகுப்பு தமிழ் விஸ்வகர்மா உறவின்முறை சங்கம், கோவை மாவட்ட தங்கநகை கூலி தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, அனைத்து வசதிகளுடன் கூடிய தங்க நகை தொழில் பூங்கா அமைத்து தர வேண்டும் என்றும், பொற்கொல்லர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்ந்திட உதவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் அவர்கள், தங்கநகை தயாரிக்கும் கைவினைஞர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் அவர்கள், கோயம்புத்தூர், தர்மராஜா கோயில் வீதி, கெம்பட்டி காலனியில் உள்ள தங்கநகை தயாரிப்பு பட்டறைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பொற்கொல்லர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது கோவை தங்கநகை தயாரிப்பாளர்கள் கூட்டு குழுமத்தின் தலைவர் ரகுநாதன் சுப்பையா முதலமைச்சர் அவர்களிடம், பொற்கொல்லர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கும், தொழில் முன்னேற்றத்திற்கும் தேவையான உதவிகளை செய்திடுமாறு கோரிக்கை விடுத்தார். அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் அவர்கள், நம்பிக்கையுடன் இருங்கள், அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று தெரிவித்தார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!