Tamilnadu

பிராட்வே பேருந்து நிலையம் ராயபுரத்துக்கு இடமாற்றம் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு... பின்னணி என்ன ?

இதற்காக சென்னை மாநகராட்சி நிர்வாகம் ரூ.823 கோடியை ஒதுக்கியுள்ளது. அதன்படி, பிராட்வே பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி முழுவதும் இடிக்கப்பட்டு , 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.. அதே போன்று பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது.

மேலும் மெட்ரோ ரெயில் நிலையம், புறநகர் ரெயில் நிலையம் என அனைத்தும் இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணியை சென்னை மெட்ரோ ரெயில்வே சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவை இணைந்து மேற்கொள்கிறது..

இதற்கிடையே பொதுமக்கள் வசதிக்காக பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக தீவுத்திடலுக்கு மாற்ற கடந்த ஜூன் மாதம் சென்னை மாநகராட்சி திட்டமிட்டது. அதோடு தீவுத்திடலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டது .

இந்த நிலையில், தீவுத்திடலுக்கு பதிலாக பேருந்து நிலையத்தை தற்காலிகமாக ராயபுரம் என்.ஆர்.டி.மேம்பாலம் அருகே உள்ள சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான இடத்தில் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து, தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

தற்காலிக பேருந்து நிலைய பணியை நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் முதல் வாரத்தில் முழுமையாக பிராட்வே பஸ் நிலையத்தை அங்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் 45 குடும்பங்களை இடமாற்றம் செய்யவும் இடம் கண்டறியப்பட்டுள்ளது.

Also Read: ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்திற்கு இந்தியில் பதில் : ஒன்றிய அமைச்சருக்கு பதிலடி கொடுத்த கேரள MP !