Tamilnadu
கனமழையால் மண் சரிவு! : மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் இன்று ரத்து!
தமிழ்நாட்டில் பருவமழைக் காலம் தொடங்கிய நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் தீவரப்படுத்தப்பட்டு வரும் நிலையிலும், இயற்கையாக நடக்கக்கூடிய சில பாதிப்புகள் தவிர்க்க முடியாததாய் அமைந்து வருகின்றன.
அவ்வாறு, நேற்று (நவம்பர் 2) நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, விபத்துகள் எதற்கும் வழி வகுக்காத வகையில், இன்றைய நாள் (நவம்பர் 3) மேட்டுப்பாளையம் - குன்னூர் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
அதன்படி, ரயில் எண் 06136 (மேட்டுப்பாளையம் - உதகை) மற்றும் ரயில் எண் 06137 (உதகை - மேட்டுப்பாளையம்) ஆகிய ரயில்கள் இன்று செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரமைப்பு பணிகள் விரைவில் நிறைவுற்று, ரயில் சேவை நாளை அல்லது ஓரிரு நாட்களில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு