Tamilnadu
கேரள விபத்து : உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த பணியாளர்கள்... முதலமைச்சர் நிவாரணம் !
கேரளா மாநிலம், பாலக்காடு, ஷோரனூர் அருகில் கேரளா எக்ஸ்பிரஸ் இரயில் மோதிய விபத்தில் தண்டவாளத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் உயிரிழந்த துப்புரவுப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியான அறிவிப்பில், “கேரளா மாநிலம், பாலக்காடு, ஷோரனூர், பாரதப்புழா பாலம் அருகில் நேற்று (02.11.2024) பிற்பகல் கேரளா எக்ஸ்பிரஸ் இரயில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் இரயில் பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டம் மற்றும் வட்டம், ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலை புதூர் கிராமத்தைச் சேர்ந்த திரு.லட்சுமணன் (வயது 55) த/பெ.அண்ணாமலை, திருமதி.வள்ளி (வயது 45) க/பெ.லட்சுமணன், காரைக்காடு, டி.பெருமாள் பாளையத்தைச் சேர்ந்த திரு.லட்சுமணன் (வயது 45) த/பெ.ராமசாமி, மற்றும் அல்லிக்குட்டையைச் சேர்ந்த திருமதி.ராஜம்மாள் (வயது 43) த/பெ.வீரன் ஆகிய நால்வரும் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
”மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி” : ஹேமந்த் சோரனுக்கு வாழ்த்து சொன்ன CM MK Stalin!
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!