Tamilnadu

நம் உயிர், உடல், அன்னை, தந்தை என எல்லாம் சேர்ந்ததுதான் ‘தமிழ் மொழி!’ : அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில், நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மணி விழாவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர்  கோவி. செழியன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை வழங்கினர்.

அப்போது பேசிய அமைச்சர் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், “மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றால் அது தமிழ் மொழிதான். பிறமொழிகள் வேலைவாய்ப்புக்கும், படிப்புக்கும் பயன்படும், தாய்மொழி தமிழ் நம் உயிராய், உடலாய், அன்னையாய், தந்தையாய் என எல்லாம் சேர்ந்தது தான் நம் தமிழ் மொழி.

தமிழ் மொழி மேலும் மேலும் சிறப்பப்படுகிறது என்றால் அதற்கு ஆட்சியாளர்களும், திராவிட கழகமும் தான் காரணம். இன்று கூட மும்மொழி கொள்கையை, இந்திய மாநிலங்களிடம் ஒன்றிய அரசு திணிக்கிறது, அதற்கு எதிராக முதன் முதலில் குரல் கொடுத்தவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கலைஞர் வந்த பிறகுதான் தமிழ் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களாக வர முடிந்தது. சட்டமன்ற கூட்ட தொடரில் கலைஞர் திருக்குறளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்” என்றார்.

Also Read: “யார், ஏன், எப்படி?... விரல் நீட்டுவதற்கு முன் கவனியுங்கள்...” - மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே பதிலடி !