Tamilnadu
தீபாவளி கொண்டாட்டம் : தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்த அளவில் தீ விபத்து!
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இந்த கொண்டாட்டத்தின்போது மக்கள் பலரும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்வர். ஆனால் பட்டாசு வெடிக்கும்போது சிலர் ஆர்வக் கோளாறில் தங்கள் கைகளில் வைத்தும், பிறர் மீது எறிந்தும் பட்டாசு வெடிப்பர்.
இதனால் ஆண்டுதோறும் தீ விபத்துகள் ஏற்படும். இந்த தீ விபத்துகளை தடுப்பதற்காக ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதோடு பட்டாசை பாதுகாப்பாக வெடிக்கவும், காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கவும் தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்படுவதும் வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நேற்று (அக்.31) கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மக்களுக்கு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டு, பல விசயங்கள் அறிவுறுத்தப்பட்டது.
எனினும் தீபாவளியின்போது பட்டாசுகள் மூலம் ஏற்படும் தீ விபத்துகளை தவிர்க்க முடியாததாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையின்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தீ விபத்துகள் கடந்த ஆண்டை விட குறைவு என தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப்பணிகள் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப்பணிகள் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
“தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப்பணிகள் துறை - தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்ணிகள் துறை தீபாவளி பாதுபாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திலுள்ள 368 தீயணைப்பு மீட்புப்பணிகளில் பணிபுரியும் 8000 மேற்பட்ட அலுவலகர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். அதேபோல் சென்னை மாநகரில் உள்ள 43 தீயணைப்பு - மீட்புப்பணிகள் நிலையங்களில் பணிபுரியம் 800 மேற்பட்ட அலுவலகர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.
கடந்தாண்டுகளில் தீபாவளி திருளான்று சென்னை மாநகரில் பட்டாசு வெடிப்பதால் ஏற்பட்ட தீவிபத்தின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 இடங்களில் தீயணைப்பு ஊர்திகள் பாதுகாப்பு பணிபுரிய வெளி மாவட்டங்களிலிருந்து கூடுதலாக வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.
பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என 2406 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டது. இதில் சென்னை மாநகரில் மட்டும் 276 இடங்களில் இப்பிரச்சாரங்கள் நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் தீபாவளி திருநாளன்று பட்டாசு மற்றும் இராக்கெட் வெடித்ததில் 254 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 102 தீ விபத்துகள் பட்டாசு மற்றும் ராக்கெட் வெடித்ததில் நிகழ்ந்தது.
இவ்வாண்டு தொடர் மழை மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தீபாவளி திருநாளன்று (31.10.2024) தமிழகத்தில் 150 தீ விபத்துகள் பட்டாசு மற்றும் இராக்கெட் வெடித்ததில் ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் 48 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தீ விபத்துகள் மிக குறைந்த எண்ணிக்கையில் நிகழ்ந்துள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
குற்றவாளிக்காக காவல்நிலையத்தில் ஸ்டூடியோ வசதி : பஞ்சாப் காவல்துறைக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் !
-
தீபாவளி கொண்டாட்டம்: கடந்த ஆண்டை விட சென்னையில் குறைந்த காற்று மாசு - மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் !
-
சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 19 இளைஞர்கள் : அனைவருக்கும் HIV தொற்று பரவியதால் அதிர்ச்சி !
-
Avengers Assemble : அமெரிக்க தேர்தலில் கமலா ஹாரிஸ்க்கு அவெஞ்சர்ஸ் நடிகர்கள் வீடியோ வெளியிட்டு ஆதரவு !
-
தோனியை தக்கவைத்த CSK : 2025 IPL தொடரில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் அணி விவரம்!