Tamilnadu
நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனையான சிவகாசி பட்டாசு... வணிகர்கள் கூட்டமைப்பு மகிழ்ச்சி!
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு பலரும் பட்டாசு வெடித்து மகிழ்வர். அந்த வகையில் சிவகாசியில் இருந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் ஆண்டுதோறும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பட்டாசு விற்பனையாளர்கள் சங்கத்தினர் சார்பில், சிவகாசியில் நடப்பாண்டு உற்பத்தியான பட்டாசுகள், இந்தியா முழுவதும் அனுப்பப்பட்டு ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், தயாரிப்பு குறைந்த நிலையில் கூட கடந் தாண்டை காட்டிலும், நடப்பாண்டில் பட்டாசு விற்பனை சிறப்பாக இருந்ததாக பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு உற்பத்தி சீசன் காலமான கடைசி நேரத்தில் தொடர் மழையினால் சீதோசன சூழ்நிலை காரணமாக பட்டாசு உற்பத்தியில் தொய்வு மற்றும் ஆரம்ப நேரத்தில் பட்டாசு விபத்தில் நடந்த உயிரிழப்பு காரணமாக தொழிற்சாலைகளில் நடத்தப்பட்ட தொடர் ஆய்வு போன்றவற்றால் பட்டாசு உற்பத்தியில் 25% பின்னடைவு இருந்ததாகவும், இருந்த போதிலும் இந்தியா முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்பட்ட பட்டாசுகளில், நாடு முழுவதும் சரி, அதே போன்று தமிழகத்திலும் சரி, 95% பட்டாசுகள் விற்பனையானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு 75% பட்டாசு உற்பத்தி மட்டுமே நடந்த போதிலும், கடந்த வருடத்தைப் போலவே இந்த ஆண்டிலும் இந்தியா முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு வணிகம் நடந்துள்ளது. இதற்கு காரணம் கடந்த வருடம் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசுகள் உற்பத்தி செய்து நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், ரூ.6 ஆயிரம் கோடிக்கு மட்டுமே பட்டாசு வணிகம் நடந்தது.
தற்போது அந்த மீதமுள்ள 1000 கோடி ரூபாய்க்கு மதிப்பிலான பட்டாசுகள் விற்பனையாகாமல் வியாபாரிகளிடம் இருப்பு இருந்துள்ள பட்சத்தில், நடப்பாண்டில் பட்டாசு உற்பத்தி அளவு குறைந்தாலும் கூட, கடந்த காலத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ஆயிரம் கோடி ரூபாய் பட்டாசுகளும் தற்போது விற்பனையானதால், நடப்பாண்டிலும் 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனை நடந்து ஈடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை விற்பனைக்காக அனுப்பப்பட்டிருந்த எல்லா பட்டாசுகளும் நல்ல முறையில் சிறப்பாக விற்பனையாகியுள்ளதால், அதற்குண்டான (பணம் வசூல் ஆகி) தொகை தங்கள் கைக்கு கிடைத்து வந்தவுடன், மழைக்கால சீதோசனத்திற்கு ஏற்ப எதிர்வரும் காலத்திற்கான பட்டாசு உற்பத்தியை தாங்கள் தொடங்கப் போவதாகவும், வரும் காலங்களிலும் அனைத்து தரப்பினர்களும்பட்டாசு தொழிலுக்கு ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை யிருப்பதாகவும், பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
தோனியை தக்கவைத்த CSK : 2025 IPL தொடரில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் அணி விவரம்!
-
Mayonnaise விற்பனைக்கு திடீர் தடை விதித்த தெலங்கானா அரசு காரணம் என்ன?
-
தவறை ஒப்புக்கொண்ட ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி! : தொடக்கத்தில் உண்மையை மறுத்தது ஏன்?
-
மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தி.மு.க MLA : நெகிழ்ச்சி சம்பவம் என்ன?
-
அமரன்: “கற்பனை Super Hero-க்களை பார்த்த குழந்தைகளுக்கு நிஜ Heroவை காட்டுங்கள்” - நடிகர் சிவகார்த்திகேயன்!