Tamilnadu
மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தி.மு.க MLA : நெகிழ்ச்சி சம்பவம் என்ன?
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு கிராமத்தில் உள்ள தி.மு.க நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் தீபாவளி பரிசு வழங்கினார்.
பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் அங்கிருந்த தேநீர் கடையில் தேநீர் அருந்தினார். அப்போது, பூம்பூம் மாட்டு காரர்கள் சமூகத்தை சேர்ந்த 3 அடி மட்டுமே உயரம் கொண்ட மாற்றுத்திறனாளி சிறுவனும், அவரது நண்பனும் சட்டமன்ற உறுப்பினருக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அப்போது வசந்தம் கார்த்திகேயன் சிறுவர்களிடம், ’நீங்கள் எப்படி இங்கு வருகிறீர்கள்’ என்று கேட்டார். இதற்கு மாற்றுத்திறனாளி சிறுவன் ஒரு பழைய சிறிய சைக்கிளை காட்டி 'இதில் தான் நாங்கள் இருவரும் வருவோம்" என கூறியுள்ளார்.
பின்னர் உடனே, சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மாணவரணி அமைப்பாளர் விஜய் ஆனந்தை அழைத்து ரூ. 25,000 வழங்கி இரண்டு சிறுவர்களையும் ஜவுளி கடைக்கு அழைத்துச் சென்று அவர்கள் விரும்பும் புதிய ஆடைகளை எடுத்து அவர்களுக்கு பிடித்த சைக்கிளை வாங்கி கொடுக்கும்படி கூறினார்.
இதனைத் தொடர்ந்து, சிறுவர்களை துணிக்கடைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு பிடித்த புதிய துணி வாங்கி கொடுத்து, பிறகு மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சிறிய புதிய சைக்கிள் ஒன்றும் வாங்கிக் கொடுக்கப்பட்டது. இதனால் நெகிழ்ச்சியடைந்த மாற்றுத்திறனாளி சிறுவன் வெற்றி, சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
Also Read
-
தோனியை தக்கவைத்த CSK : 2025 IPL தொடரில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் அணி விவரம்!
-
Mayonnaise விற்பனைக்கு திடீர் தடை விதித்த தெலங்கானா அரசு காரணம் என்ன?
-
தவறை ஒப்புக்கொண்ட ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி! : தொடக்கத்தில் உண்மையை மறுத்தது ஏன்?
-
அமரன்: “கற்பனை Super Hero-க்களை பார்த்த குழந்தைகளுக்கு நிஜ Heroவை காட்டுங்கள்” - நடிகர் சிவகார்த்திகேயன்!
-
'ஜெய் ஸ்ரீராம்' கோசமெழுப்ப மறுத்த பெண் : மருத்துவமனையில் மறுக்கப்பட்ட உணவு : வீடியோ வெளியாகி அதிர்ச்சி !