Tamilnadu
மின்சாரம் தாக்கி உயிரிழந்த உதவி ஆய்வாளர்: 25 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் உத்தரவு !
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியான அறிக்கையில்,
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த சரவணன் (வயது 36) என்பவர் இன்று 31.10.2024 அதிகாலை சுமார் 1.00 மணியளவில் பரமக்குடி நகரில் இரவு நேர ரோந்துப் பணியின் போது கீழே விழுந்த இருப்புக் கம்பத்தை அகற்றும்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
உதவி ஆய்வாளர் சரவணன் அவர்களின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
உதவி ஆய்வாளர் திரு.சரவணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
தோனியை தக்கவைத்த CSK : 2025 IPL தொடரில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் அணி விவரம்!
-
Mayonnaise விற்பனைக்கு திடீர் தடை விதித்த தெலங்கானா அரசு காரணம் என்ன?
-
தவறை ஒப்புக்கொண்ட ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி! : தொடக்கத்தில் உண்மையை மறுத்தது ஏன்?
-
மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தி.மு.க MLA : நெகிழ்ச்சி சம்பவம் என்ன?
-
அமரன்: “கற்பனை Super Hero-க்களை பார்த்த குழந்தைகளுக்கு நிஜ Heroவை காட்டுங்கள்” - நடிகர் சிவகார்த்திகேயன்!