Tamilnadu

கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை : சென்னையில் மோசமடைந்த காற்று மாசு !

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரக்கூடிய நிலையில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலும் நேற்று இரவில் இருந்தே தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

காலையில் எழுந்து புத்தாடை அணிந்து பொதுமக்கள் வீடுகளில் பட்டாசுகளை வெடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தலைநகர் சென்னையில் நேற்று இருந்து பொதுமக்கள் பட்டாசு வெடித்ததன் காரணமாக நேற்று பல்வேறு இடங்களில் காற்றின் தர குறியீடு மோசமடைந்தது...

அந்த வகையில் இன்று சென்னையைப் பொருத்தவரை காலை 7 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு 190 ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.அதிகபட்சமாக மணலியில் 254, அரும்பாக்கத்தில் 210, பெருங்குடியில் 201 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மோசம் அடைந்து உள்ளது...

அதேபோல் கொடுங்கையூரில் 159, மணலியில் 181, ராயபுரத்தில் 164, வேளச்சேரியில் 163 மிதமாக காற்று மாசு அதிகரித்துள்ளது சென்னையில் எந்த ஒரு பகுதியிலும் காற்றின் தரம் நன்றாக இல்லை மத்திய மாசுக்கட்டு பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது...

மேலும் சென்னையில் அருகாமையில் இருக்கக்கூடிய திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 204 என்ற அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 154, கடலூரில் 142, கோவையில் 104, புதுச்சேரியில் 119 என்ற அளவில் காற்றின் தரக்கூடியீடு மிதமான அளவில் அதிகரித்து வருகிறது....

காற்று தரக் குறியீடு 100க்கு மேல் உள்ள பகுதிகளில் ஆஸ்துமா, இதய நோயாளிகள் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படும் என்பதும், காற்று தரக்குறியீடு 200 க்கு மேல் உள்ள பகுதிகளில் பெரும்பாலானோருக்கு சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.