Tamilnadu
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பேருந்துகளில் இருக்கும் பயணிகளிடம் குறைகளை அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், ”சிறப்பு பேருந்துகள் மூலம் நேற்று முன்தினம் ஒரு லட்சத்து 10 பயணிகள் பயணம் செய்துள்ளார்கள். நேற்றைய தினம் 2 லட்சத்து 33 ஆயிரம் பேர் பயணம் செய்திருந்தார்கள். இன்றைய தினம் மாலை வரை 1 லட்சத்தை 33 ஆயிரத்து 925 பேர் பயணம் செய்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக இதுவரை 3 லட்சத்து 41 ஆயிரத்து 738 பேர் பயணம் செய்திருக்கிறார்கள். இன்னும் ஒரு லட்சத்து மேற்பட்ட பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக அனைத்து பேருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்துகள் இயக்குவது எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அரசு கட்டணத்தில் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்துகள் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றன. மக்கள் பிரச்சனை இல்லாமல் மகிழ்ச்சியாக பயணம் செய்து வருகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
-
விருதுநகர் மாவட்டத்தில் 2 பேரூராட்சிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!