Tamilnadu

முத்துராமலிங்கத் தேவர் அரங்கம்! : காணொளி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்பு விழாவிற்கு மரியாதை செலுத்த வருகை தரும் பொதுமக்கள் வசதிக்காக தற்காலிக கூடம் அமைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், தற்காலிக கூடம் அமைக்கப்படுவதால், ஆண்டுதோறும் சிரமம் உள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, தற்காலிக கூடத்தை நிலையான கூடமாக அமைக்கும் வகையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயம் முன்பு ரூ. 1.55 கோடி மதிப்பிட்டில், ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் இருக்கும் வகையில் 9.800 சதுர அடியில் முத்துராமலிங்கத் தேவர் அரங்கம் ஒன்று, தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டமைக்கப்பட்டது. அதனை இன்று (அக்டோபர் 28) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் காதர் பாட்ஷா, முத்துராமலிங்கம் செ.முருகேசன், ஆட்சியர் அபிலாஸ் ஹபூர், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் வேலுச்சாமி, கமுதி ஒன்றிய சேர்மன் தமிழ்செல்வி போஸ், மாவட்ட கவுன்சிலர் வாசுதேவன், நினைவிட பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Also Read: காற்றுத் தரத்தின் பட்டியலில், டெல்லிக்கு ‘மிகவும் கவலைக்கிடம்’ நிலை!: தலைநகரில் அதிகரிக்கும் காற்று மாசு!