Tamilnadu
“பாசிசத்தை கடக்க நினைக்கிறாரா? அல்லது சமம் செய்ய முயல்கிறாரா?” - விஜய்யின் பேச்சுக்கு எழிலசரன் பதிலடி!
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்த கலைத்திருவிழா போட்டியினை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்தப் போட்டியில் காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள 60-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 6-12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று மாணவர்கள் வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர். இதில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக தினித்திறன்களை மாணவர்கள் வெளிபடுத்தினர். இதில் கவின்கலை, இசை, கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் தி.மு.க மாணவரணி செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான சி.வி.எம்.பி.எழிலரசன் பேசியதாவது, “நடிகர் விஜய் அவர்களுக்கு பாசிச கொள்கை என்ன என்பதில் புரிதல் இல்லை என்பது தெரிகிறது. பாசிசம் என்பதைப் பற்றி அவர் ஒழுங்காக புரிந்துக்கொள்ளவில்லை. பாசிசத்தை பாயாசத்தோடு ஒப்பிட்டு அவர் பேசுகையில், அதை அவர் எளிதாக கடந்து செல்ல பார்க்கிறாரா? அல்லது சமம் செய்ய முயல்கிறாரா? என்ற கேள்வியே எழுகிறது.
பிரிவினைவாதத்தை, மதவெறித்தன்மையை எதிர்க்கிறேன் என்று சொல்பவரிடம், பாசிசத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லுதல் இருக்க வேண்டும். ஒருவேளை பாசிசத்தை அவர் கடந்து செல்ல பார்க்கிறார் என்று சொன்னால், பாசிசத்தை முன்னெடுக்கும் பாஜக போன்றவைகளை கடந்து செல்ல பார்க்கிறார் என்றே அர்த்தம்.
நேற்று (அக்.27) விஜய் மாநாட்டில் ஏராளமான இளைஞர்கள் வந்திருப்பது, அவர் ஒரு பிரபல நடிகர் என்பதாலே திருவிழா, ஆடியோ லான்ச் போல கூட்டம் கூடியது. தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் திமுக உடனாகவும் அறனாகவும் திராவிட மாடலுக்கு துணை நின்று விளங்குகிறது. தமிழகத்தில் திராவிட மாடல் வேண்டாம் என ஒருவர் கூறினால் என்றால், யாராலும் நிற்க முடியாது என்பதுதான் வரலாறு.
திராவிட மாடல் என்பது சமத்துவத்துக்கானது, சுயமரியாதைக்கானது, அனைவருக்குமான வாய்ப்பினை வழங்க கூடியது, சமூகநீதி, சகோதரத்துவம், மதசார்பின்மை, பெண்ணுரிமை என்று சொல்லக்கூடிய அனைத்தும் இருக்கும் உயரியசொல் திராவிட மாடல். இது யாரையும் பிரிக்காது, அழிக்காது, பிரித்த ஆளுகின்ற சூழ்ச்சிக்கும் தள்ளாது.
இது அனைவரையும் ஒன்று சேர்க்கும். அனைவரையும் சமம் என்று கூறும். அனைவருக்கும் வாய்ப்பினை வழங்குவது தான் திராவிடம் என்று சொல்லக்கூடியது. அந்த வகையில் இளைஞர்கள் கூட்டம் என்றென்றும் திராவிட மாடலுக்கு திராவிட இயக்கத்திற்கு ஒத்துழைத்து அரணாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.
திராவிடம் என்றால் பகுத்தறிவு, சுயமரியாதை, மொழி உணர்வு, தன்மான உணர்வு, சமூக நீதி, சமத்துவம், மதசார்பற்ற தன்மை, மதநல்லிணக்கம், சகோதரத்துவம், இதை அனைத்தையும் வேண்டாம் என ஒருவர் சொல்வார் ஆனால், அவர் ஏதேனும் இந்த கொள்கையை பேச முடியாது என்றால், தமிழ்நாட்டில் யாராலும் நிற்க முடியாது என்பது தான் வரலாறு.
அதை தீர்க்கமாக அரசியல் சட்டத்தின் வாயிலாக இரு மொழி கொள்கையாகட்டும், சுயமரியாதை திருமணமாகட்டும், இந்த மண்ணிற்கு தமிழ்நாடு என பெயர் இயற்றியவர் அண்ணா, சமத்துவமும், சமூக நீதியும் அனைவருக்கும் வாய்ப்பினை வழங்கப்பட வேண்டும்; இட ஒதுக்கீட்டு கொள்கையில் விரிவாக்கம் செய்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்; சமூக நீதி என்பது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கான உரிமை என்பது சொத்துரிமையை, அரசியல் உரிமையை, சமூக உரிமையை பெற்று தந்தவராக கலைஞர் விளங்குகிறார். இவை எல்லாம் இருக்காது, இருக்க முடியாது என்று ஒருவர் சொல்ல முடியுமா?" என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!