Tamilnadu
நமது அரசு பள்ளி மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு.. அமைச்சர் அன்பில் மகேஸை அழைத்த Dassault Systems நிறுவனம்!
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் TANCAM வழியாக Dassault Systems இதுவரை 20000 மாணவ, மாணவிகளுக்கு உயர் தொழில்நுட்ப பயிற்சி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் TATA நிறுவனத்துடன் இணைந்து 71 தொழிற்கல்வி நிறுவனங்களின் மாணவ, மாணவிகளுக்கும் பயிற்சி வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அவர்களின் பிரான்ஸ் நாட்டிலும் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கி வருகின்றது. ‘கனவு ஆசிரியர்’ விருது பெற்ற ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ், பிரான்ஸ் நாட்டில் கல்விச் சுற்றுலா மேற்கொண்டு வருகின்றார். இதனை அறிந்த Dassault Systems நிறுவனம் தங்கள் தலைமையகம் வருமாறு அமைச்சருக்கு அழைப்பு விடுத்தது.
தொடர்ந்து Dassault Systems நிறுவனத்தின் தலைமையகம் சென்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், அந்நிறுவனத்தின் 2040ஆம் ஆண்டிற்கான இலக்குகளை விவரிக்கும் காட்சிப் படங்களைப் பார்வையிட்டார். தொடர்ந்து அந்நிறுவன அதிகாரிகளுடன் கல்விச் சார்ந்த கலந்துரையாடலிலும் கலந்துகொண்டார். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பள்ளிக் கல்வித் தொடர்பான திட்டங்கள் குறித்து அந்நிறுவனத்தாரிடம் எடுத்துரைத்தார்.
‘தமிழ்நாட்டில் அதிகளவிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க காத்திருக்கிறோம்’ எனும் விருப்பத்தை அப்போது தெரிவித்துள்ளார்கள். இதனை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துரைத்து செயல்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக AI தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது Dassault Systems நிறுவனமும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் போது தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் நரேஷ், இணை இயக்குநர் முனைவர் இராஜேந்திரன் மற்றும் Dessault நிறுவனத்தின் Valerie Ferret, Thierry Chevrot, Dominique Anderson ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
Also Read
-
தவறை ஒப்புக்கொண்ட ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி! : தொடக்கத்தில் உண்மையை மறுத்தது ஏன்?
-
மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தி.மு.க MLA : நெகிழ்ச்சி சம்பவம் என்ன?
-
அமரன்: “கற்பனை Super Hero-க்களை பார்த்த குழந்தைகளுக்கு நிஜ Heroவை காட்டுங்கள்” - நடிகர் சிவகார்த்திகேயன்!
-
'ஜெய் ஸ்ரீராம்' கோசமெழுப்ப மறுத்த பெண் : மருத்துவமனையில் மறுக்கப்பட்ட உணவு : வீடியோ வெளியாகி அதிர்ச்சி !
-
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் - நவம்பர் 6 முதல் தேர்தல் பிரச்சாரம்! : இந்தியா கூட்டணி அறிவிப்பு!