Tamilnadu
“நவீனமயமாக திறக்கப்படும் அண்ணா புற்றுநோய் மையம்” : எங்கு? எப்போது? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
திமுக மாநில மகளிர் அணி சார்பில் மார்பக புற்றுநோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு முகாம் சென்னை பெசன்ட் நகரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் .
அப்போது இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது, “திருப்பத்தூர், ஈரோடு, இராணிப்பேட்டை மற்றும் கன்னியாகுமரியில் 9 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 117 பேருக்கு புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது உடனடியாக சிகிச்சை அளிக்கும் பணியை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புற்று போய் பரிசோதனை மூலம் 117 பேர் காப்பாற்றப்பட்டுள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் விரைவில் 38 மாவட்டங்களிலும் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இன்னும் ஓராண்டில் காஞ்சிபுரத்தில் அண்ணா புற்றுநோய் மையம் நவீன மையத்தில் திறக்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திமுக மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன், மகளிர் அணி இணை செயலாளர் குமரி விஜயகுமார் மற்றும் மகளிர் அணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Also Read
-
தோனியை தக்கவைத்த CSK : 2025 IPL தொடரில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் அணி விவரம்!
-
Mayonnaise விற்பனைக்கு திடீர் தடை விதித்த தெலங்கானா அரசு காரணம் என்ன?
-
தவறை ஒப்புக்கொண்ட ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி! : தொடக்கத்தில் உண்மையை மறுத்தது ஏன்?
-
மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தி.மு.க MLA : நெகிழ்ச்சி சம்பவம் என்ன?
-
அமரன்: “கற்பனை Super Hero-க்களை பார்த்த குழந்தைகளுக்கு நிஜ Heroவை காட்டுங்கள்” - நடிகர் சிவகார்த்திகேயன்!