Tamilnadu
சாம்சங் தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு : முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்த கூட்டணி கட்சித் தலைவர்கள் !
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள சாம்சங் இந்தியா தொழிற்சாலை நிறுவன ஊழியர்கள் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் ஊதிய உயர்வு, சிஐடியு தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்துக்கு வந்த நிலையில், பேச்சுவார்தைக்காக அமைச்சர்களை நியமித்து இந்த விவகாரத்தில் சுமுகமான முறையில் தீர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள், நிர்வாகத்தினர் என அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த் பேச்சுவார்த்தையின் முடிவில் சுமுக முடிவு எட்டப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவர் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்ட முதலமைச்சரை கூட்டணி கட்சித் தெரிவித்தனர்.
CPIM மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், CPI மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கூட்டமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய CPIM மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் பிரச்சனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, 4 அமைச்சர்களை நியமித்து சாம்சங் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் கடந்த 17ஆம் தேதி தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினார்கள். இதற்காக முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தோம்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
தோனியை தக்கவைத்த CSK : 2025 IPL தொடரில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் அணி விவரம்!
-
Mayonnaise விற்பனைக்கு திடீர் தடை விதித்த தெலங்கானா அரசு காரணம் என்ன?
-
தவறை ஒப்புக்கொண்ட ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி! : தொடக்கத்தில் உண்மையை மறுத்தது ஏன்?
-
மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தி.மு.க MLA : நெகிழ்ச்சி சம்பவம் என்ன?
-
அமரன்: “கற்பனை Super Hero-க்களை பார்த்த குழந்தைகளுக்கு நிஜ Heroவை காட்டுங்கள்” - நடிகர் சிவகார்த்திகேயன்!