Tamilnadu
“வெளிநாடுகளை போன்று இங்கு பயிற்சி வழங்கப்படுகிறது..” -இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் பெருமிதம்!
சென்னை தலைமைச் செயலகத்தில், தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று முதல் ஆண்டிலேயே அகில இந்திய தொழிற் தேர்வில், இந்திய அளவில் பல்வேறு தொழிற் பிரிவுகளில் முதலிடம் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 29 மாணவ, மாணவியர்களும் மற்றும் காட்டுமன்னார் கோவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய பயிற்றுநர் ஒருவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இந்த நிகழ்வில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய பயிற்றுநர் வி.ஸ்வேதா, மாணவர்கள் உள்ளிட்ட் பலரும் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது, “இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தொழிற்பயிற்சி நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
டாட்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு பணி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மாணவர்கள் முதல் முறையாக 29 மாணவர்கள் அகில இந்திய தேர்வில் முதலிடம் பெற்றுள்ளனர். தொழிற்சாலைகளில் உள்ள தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதால் மாணவர்களுக்கு தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்கு உதவியாக இருக்கும் என்றும் வேலைவாய்ப்பும் எளிதாக கிடைக்கிறது” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மாணவர்கள் பேசியதாவது, “தரம் உயர்த்தப்பட்ட பிறகு எங்களது திறன் அதிகரித்துள்ளது. முன்பை விட பல மடங்கு தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில் வழங்கப்படுவது போன்ற பயிற்சி தற்போது எங்களுக்கும் அளிக்கப்படுகிறது.
தொழிற்சலைகளுக்கு ஏற்ப பயிற்சி வழங்கப்படுவது எதிர்காலத்தில் பணிபுரிவதற்கு உதவியாக இருக்கும் மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஐடிஐ-களில் வழங்கப்படும் பயிற்சி சொந்தமாக தொழில் தொடங்கலாம் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது” என தெரிவித்தனர்.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!