Tamilnadu

நெல்லை MS பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக ABVP தலைவர்.. ஆளுநரின் செயலை கண்டித்து SFI ஆர்ப்பாட்டம் !

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆட்சி பேரவை என்று அழைக்கப்படும் சிண்டிகேட் உறுப்பினராக ஏ பிவிபி மாநில தலைவர் சவீதா ராஜேஷை ஆளுநர் நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை என்று அழைக்கப்படும் சிண்டிகேட் உறுப்பினர்களின் மூன்று பேரை ஆளுநர் நியமனம் செய்யலாம். அந்த வகையில் ஆளுநர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை சிண்டிகேட் உறுப்பினராக ஏ பி வி பி மாநில தலைவர் சபிதா ராஜேஷை நியமனம் செய்துள்ளார்.

ஆளுநரின் நடவடிக்கைக்கு பல்கலைக்கழகமும் ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆர் எஸ் எஸ் அமைப்பின் மாணவர் பிரிவை சேர்ந்த ஏ பி விபி மாநிலத் தலைவர் சவிதா ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.

அந்த வகையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பல்கலைக்கழகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து கல்வி நிலையங்களை காவிமயமாக்கும் நடவடிக்கைகளை ஆளுநர் மேற்கொண்டு வருவதாகவும் ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்தை கல்வி நிலையங்களில் புகுத்த இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் குற்றம் சாட்டி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தமிழ் தாய் வாழ்த்தை அவமதித்து விட்டு தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பெயர் தாங்கிய பல்கலைக்கழகத்திற்கு பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தருவது நகைப்புக்குரியது என்றும் கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்

அதோடு உடனடியாக சவீதா ராஜேஷ் சிண்டிகேட் நியமனத்தை உடனடியாக திரும்பப் பெற வில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எந்தச் சக்தியாலும் வீழ்த்தவும் முடியாது, சிதைக்கவும் முடியாது - முரசொலி !