Tamilnadu

ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி! : டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையில் ரூ. 42 கோடியில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி கட்டுமான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு.

படகு நிறுத்தும் இடம், கட்டுப்பாட்டு மையம், work shop, உடற்பயிற்சி கூடம், யோகா மையம், பொருட்கள் வைக்கும் அறை, தங்கும் அறை, உணவுக் கூடம் ஆகியவைகள், இவ்விளையாட்டு அகாடமியில் அமைய உள்ளன.

இதில் பாய்மரப்படகு, மரத்தான் நீச்சல் உள்ளிட்ட ஒலிம்பிக் நீர் விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கிய நாளிலிருந்து, 18 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Also Read: மோசடி சாமியார்கள் : “அரசும், நீதிமன்றங்களும் பல்லற்ற வாயாக இருக்கலாமா?” - கி.வீரமணி விமர்சனம் !