Tamilnadu

மெரினா கடற்கரையில் ‘நீலக்கொடி கடற்கரை திட்டம்!’ : டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி!

டென்மாா்க் நாட்டின் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை, உலகம் முழுவதும் கடற்கரைகளை ஆய்வு செய்து அதற்கு நீலக்கொடி கடற்கரை தகுதியை வழங்கி வருகிறது.

நீலக்கொடி கடற்கரைகள் திட்டத்தின்படி, கடற்கரை சுற்றியுள்ள பகுதிகள் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் பாதுகாப்புடனும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும் அமைக்கப்படும்.

அந்த வகையில் மெரினா கடற்கரையில் நீலக்கொடி திட்டம் செயல்படுத்த சென்னை மாநகராட்சியின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை டெண்டர் கோரியுள்ளது.

இதன் மூலம் மெரினா முதல் சாந்தோம் கடற்கரை வரையிலான பகுதியில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள் உள்ளதால் பாரம்பரியம் சாா்ந்த கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கடற்கரைப் பகுதியில் நடைபாதை, மிதிவண்டி தடங்கள், விளையாட்டு பகுதி, படகுத் துறை, கண்காணிப்பு கோபுரம், பாரம்பரிய தாவரங்கள் குறித்தான ஆய்வு போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது.

Also Read: உத்தரப் பிரதேசத்தில் வீடுகளை இடிக்க தடை! : மாநில பா.ஜ.க அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!