Tamilnadu

தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை அங்காடி : பாதி விலையில் தக்காளி விற்பனை!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, அதிகளவில் மழை பெய்து வருவதால், விளைச்சலில் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக, தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே, தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலை, உச்சம் தொட்டுள்ளது.

தக்காளி விலை சுமார் ரூ. 60 முதல் ரூ. 80 வரை விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், விலையேற்றத்தால், மக்கள் அவதியுறுவதை போக்க, தமிழ்நாடு அரசின் சார்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை அங்காடியில், ஒரு கிலோ தக்காளி, ரூ.32 முதல் ரூ.60 வரை விலை நிர்ணயம் செய்து விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ. 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அனைத்து வகை காய்கறிகளுமே தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை அங்காடியில், வெளிச்சந்தையை விட குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிற நிலையில், தக்காளியை பொறுத்தவரையில் வெளிச்சந்தை விற்பனை விட பாதி விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Also Read: புதிய தணிக்கை - வெளிநாட்டில் வெளியிடப்படும் புத்தகங்கள் இந்தியாவில் தடை : எழுத்தாளர்கள் குற்றச்சாட்டு!