Tamilnadu

”உங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்கிறீர்கள்" : முதல்வருக்கு கண்ணீர் மல்க நன்றி சொன்ன தூய்மைப் பணியாளர்!

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ததையொட்டி கொளத்தூர், வீனஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வெளியேற்றும் நிலையத்தில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

மேலும், ரெட்டேரியை மேம்படுத்தும் பணிகள், தணிகாசலம் உபரிநீர் கால்வாய் அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, பாலாஜி நகரில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமை பார்வையிட்டு, கார்த்திகேயன் சாலையில் உள்ள திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து ஜம்புலிங்கம் பிரதான சாலையில் காமராசர் சத்திரத்தில் 600 தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் தூய்மைப் பணியாளர்களுக்கு மதிய உணவினை பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவருந்தினார்.

முன்னதாக, ”குப்பை கொட்டுபவர்களாக நினைக்காமல், உங்களது குடும்பத்தில் ஒருவராக நினைத்து, டீ குடித்தது எங்களுக்கு எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.” என கண்ணீர் மல்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குபெண் தூய்மைப் பணியாளர் நன்றி தெரிவித்துள்ளார்.

Also Read: மூன்றாவது நாளாக ஆய்வுப்பணியில் முதலமைச்சர்! : தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!