Tamilnadu

750 கி.மீ தூரத்திற்கு மழைநீர் வடிகால் - எங்கும் நீர் தேங்கவில்லை! : அமைச்சர் கே.என்.நேரு!

தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பாதிப்பு நிலை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்தும், நீர் தேக்கம், மின் வெட்டு போன்ற இடர்பாடுகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.

இது குறித்து, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “கடந்த ஆண்டு அனுபவத்தின் காரணமாக 990 மின்மோட்டார்கள் வைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. தொடர்ந்து 2 லட்சத்துக்கு மேற்பட்டவருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

378 அம்மா உணவகங்களில் இரண்டு நாட்களாக உணவு இலவயமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 750 கிலோமீட்டர் மழை நீர் வடிகால் கட்டப்பட்டதால் தான் தற்போது மழை நீர் நிற்காமல் சென்று கொண்டிருக்கிறது.

சென்னையின் அனைத்து இடங்களிலும் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது. ஆவடி ,மங்காடு தாம்பரம் என அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தோம். எங்குமே தண்ணீர் தேங்கி நிற்கவில்லை.

மேலும், கனமழையினையும் பொருட்படுத்தாது, சென்னையின் பல பகுதிகளில் முன்களப் பணிகளை முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கால் படாத இடமே இல்லை என்ற அளவிற்கு சென்னை முழுக்க ஆய்வு செய்துவிட்டு, திருவள்ளூரிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

இது போன்ற துரித நடவடிக்கைகளால், கடுமையான கழை பதிவாகிய நிலையிலும், அச்சப்பட தேவையில்லாத சூழல் நீடிக்கிறது” என்றார்.

Also Read: ஜம்மு - காஷ்மீர் முதல்வரானார் உமர் அப்துல்லா! : முதலமைச்சர் வாழ்த்து!