Tamilnadu

சென்னை விமான நிலையத்தில் நின்ற தனியார் சேவை : மக்களுக்கு கை கொடுத்த அரசு பேருந்து!

சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவில் இருந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னை திரும்பியவர்கள் தனியார் வாடகை கார்களை புக் செய்துள்ளனர். ஆனால் புக்கிங் கேன்சல் ஆகியுள்ளது.

இது குறித்து உடனே போக்குவரத்து துறைக்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரை அடுத்து விமான நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் கோயம்பேடு, பிராட்வே, கிளாம்பாக்கம் மற்றும் பிற பகுதிகளுக்கு இயக்கப்பட்டது.

கொட்டும் மழையில் தனியார் போக்குவரத்து சேவைகள் கிடைக்காமல் தவித்து கொண்டிருந்தவர்கள், அரசு பேருந்தை பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தனர். பிறகு அரசு பேருந்தில் ஏறி தங்கள் செல்லும் பகுதிக்கு நிம்மதியுடன் சென்றனர்.

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய பெண் பயணி, ”சென்னைக்கு விமானத்தில் வருவதற்கு முன் மழை குறித்த தகவல்களை செய்திகளில் பார்த்தோம். அங்கு வந்த பிறகு வீட்டிற்கு செல்ல வாடகை வாகனங்களை புக் செய்தால் புக்கிங் கேன்சல் ஆகிவிட்டது. பல முறை முயற்சி செய்தும் இதேநிலைதான் தொடர்ந்தது.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த போது, அரசு பேருந்துகள் சென்னை விமான நிலையத்திற்கு வந்தை பார்த்த பிறகுதான் எங்களுக்கு நிம்மதி வந்தது” கூறியுள்ளார்.

Also Read: எந்நாளும் மக்களைப் பாதுகாக்கும் அரசு : முன்கள வீரராய் வலம் வரும் துணை முதலமைச்சர்!