Tamilnadu

சென்னையின் 21 சுரங்கப்பாதைகளிலும் உடனடியாக அகற்றப்பட்ட மழைநீர் : சென்னை மாநகராட்சி தகவல்!

சென்னை மாநகரில் நேற்று (அக்டோபர் 15) பெய்த தொடர் மழையின் காரணமாக, 131 மி.மீ அளவிற்கு மழை பதிவானது. இதனால், சென்னையின் 21 சுரங்கப்பாதைகளிலும் பரவலாக மழைநீர் தேங்க நேர்ந்தது. எனினும், சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர்கற்று வாரியம் உள்ளிட்ட துறைகள் இணைந்து போர்க்கால அடிப்படையில் உடனடியாக தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டது.

மழைநீர் அகற்றப்பட்ட சுரங்கப்பாதைகள் பட்டியல் பின்வருமாறு,

1. கத்திவாக்கம் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை

2. மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை

3. வியாசர்பாடி சுரங்கப்பாதை

4. எம்.சி. ரோடு சுரங்கப்பாதை

5. ஸ்டேன்லி நகர் சுரங்கப்பாதை

6. ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை

7. கெங்குரெட்டி சுரங்கப்பாதை

8. பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை

9. வில்லிவாக்கம் சுரங்கப்பாதை

10. ஹாரிங்டன் சுரங்கப்பாதை

11. நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை

12. ஜோன்ஸ் சாலை சுரங்கப்பாதை

13. துரைசாமி சுரங்கப்பாதை

14. மேட்லி சுரங்கப்பாதை

15. ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை

16. பஜார் ரோடு சுரங்கப்பாதை

17. மவுண்ட் சுரங்கப்பாதை

18. தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை

19. பழவந்தாங்கல் சுரங்கப்பாதை

20. அரங்கநாதன் சுரங்கப்பாதை

21. கணேசபுர சுரங்கப்பாதை.

பருவமழையினை எதிர்கொள்ள 1,223 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு, மழைநீர் போர்க்கால அடிப்படையில் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது.

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் 20 செ.மீ. மழைபொழிந்தால் ஒரு வாரத்திற்கு மேல் தேங்கிய மழைநீர் அகற்றும் சூழ்நிலை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சென்னை கனமழை : இரவு, பகல் பார்க்காமல் களப்பணி ஆற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !