Tamilnadu

கொட்டித்தீர்க்கும் மழை : சென்னைக்கு 2 நாள் ரெட் அலர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், நேற்று இரவில் இருந்தே சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது.

மேலும் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது.

மேலும், வட மேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி, வட தமிழ்நாடு,தெற்கு ஆந்திரக் கரையோரம் அடுத்த 24 மணி நேரத்தில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்றும் நாளையும் சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன முதல் மிக கனமழை தொடரக்கூடும். சென்னைக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தே நிலையில், நேற்று இரவில் இருந்தே கனமழை பெய்து வருவதால் இன்றே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழையை தொடர்ந்து தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கன மழை : ”துரித நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!