Tamilnadu

”முன்கள வீரனாகத் துணை நிற்பேன்” : களத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நேற்று இரவில் இருந்தே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், யானைக்கவுனி கால்வாயில் மழைநீர் தடையின்றி சென்றிட, கழிவுகளை JCB எந்திரம் மூலம் உடனுக்குடன் அகற்றும் பணியை ஆய்வு செய்தார்.

பின்னர், பேசின் மேம்பாலத்தில் இருந்து, காந்தி கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் சேரும் இடமான பக்கிங்ஹாம் கால்வாயில் மழை நீர் தங்குதடையின்றி செல்கிறதா என நேரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, புளியந்தோப்பு பகுதியில் ஆய்வு செய்தபோது, அங்கு மீட்பு பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்களுடன் கலந்துரையாடி அவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தினார்.

பின்னர், முன்கள வீரனாகத் துணை நிற்பேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல் - நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள். அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன்” என தெரிவித்துள்ளார்.

Also Read: கன மழை : 360 டிகிரியில் களத்தில் மக்களுடன் துணை நிற்கும் தமிழ்நாடு அரசு!