Tamilnadu
திக்.. திக்.. 2 மணி நேரம் : திருச்சி விமான நிலையத்தில் பதற்றம் - நடந்தது என்ன?
திருச்சி விமான நிலையத்திலிருந்து இன்று மாலை 144 பயணிகளுடன் சார்ஜாவுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாததால் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த விமானி உடனே திருச்சி விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். பிறகு விமானம் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் விமானத்தை உடனே தரையிறக்க பிரச்சனைகள் இருந்தது. இதனால் கிட்டத்தட்ட 2 மணி நேரமாக, 26 முறை விமானம் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தது.
மேலும், விமானம் தரையிறங்கியவுடன், பயணிகளுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்கான 20க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அதேபோல், விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைக்க தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து விமானத்தை எப்படி தரையிறக்குவது என்று கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானியுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் விமானத்தை தரையில் உரசி இறக்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன் படி விமானம் தரையில் உரசி பத்திரமாக தரையிறங்கியது. எரிபொருளை குறைத்து விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய பெண் விமானி ஃபெலிசா டேனியலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
விமானம் தரையிறங்கியபோது கரும்புகை எழுந்தது. இந்நிலையில் விமானம் தரையிறங்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!