Tamilnadu

"சுதந்திர போராட்ட வீரர்களை தொடர்ந்து அவமதிக்கும் பா.ஜ.க" : அகிலேஷ் குற்றச்சாட்டு!

ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்தநாள் விழாவையொட்டி, லக்னோவில் உள்ள சர்வதேச மையத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்த மையத்திற்குள் யாரும் நுழைய முடியாதபடி, தகர சீட்டுக்களால் மூடி மறைக்கப்பட்டது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. அகிலேஷ் யாதவ் செல்வதை தடுக்கும் வகையில் சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு போலீசார் குவிப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அகிலேஷ் யாதவ், கட்சியினர் அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டதால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ், ”சுதந்திர போராட்ட வீரர்களை பாரதிய ஜனதாக கட்சி தொடர்ந்து அவமதித்து வருகிறது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் சிலைக்கு மாலை அணிவிக்க விடாமல் தடுக்கப்பட்டது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். சுதந்திர போராட்ட வீரர்களை பா.ஜ.க அவமதித்து வருவதால், அரசுக்கு அளிக்கும் ஆதரவை நிதிஷ்குமார் விலக்கி கொள்ள வேண்டும்” என குற்றம்சாட்டியுள்ளார்.

Also Read: இன்னும் ஒரு வாரத்திற்கு மழை : வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை என்ன?