Tamilnadu
பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரச நிர்வாகம் தயாராக உள்ளது - அமைச்சர் கே.என்.நேரு !
புதுக்கோட்டையில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து துறை அதிகாரிகளை அழைத்து என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் அத்தனை நகர பகுதிகளிலும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு, ஆகாயத்தாமரை அகற்றப்பட்டுள்ளது . எந்த நிலையையும் எதிர்கொள்ள அரசு நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. அனைத்து வகை மக்களுக்கும் தங்க வைப்பதற்கும் மரம் விழுந்தால் அகற்றுவதற்கும் பல இடங்களில் உணவு தயாரித்து வழங்குவதற்கும், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதற்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினர் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம் என்று என்றாவது சொல்வார்களா? நாங்கள் செயல்பட்டுள்ளோமா இல்லையா என்பதை கண்காணிக்க ஆடிட் உள்ளது. வடகிழக்கு பருவமழை சராசரியாக இருந்தால் அப்போது என்ன தேவை என்று பார்த்து அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக எடுக்கப்பட்டுள்ளது. இயற்கையின் சீற்றம் அதிகமாக இருக்கும் போது ஒரே நேரத்தில் குறுகிய நேரத்தில் அதிகமான மழை பெய்யும் போதும் சில நேரம் பணிகள் தாமதமாகும். அந்த நேரத்தில் தான் பம்பு போன்றவற்றை வைத்து நீரை எடுப்பதற்கும், பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வரி உயர்வுக்கு ஏற்கனவே சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 20 ஆண்டுகாலம் 15 ஆண்டு காலம் வரி உயர்வு இல்லாமல் ஒரே நேரத்தில் வரியை ஏற்றி சுமையை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் குறைவாக வரி விதிக்கப்படுகிறது. ஏழை மக்களை வரி உயர்வு பாதிக்காது. 1,200 சதுர அடிக்கு மேல் கட்டம் கட்டியவர்களுக்கு மட்டுமே 30, 40 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. கீழ்த்தட்டு மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை, தேர்தல் வரப்போவதால் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.
Also Read
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!
-
2 மணி நேரத்தில் 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை : களைகட்ட தொடங்கிய தீபாவளி !
-
உக்ரைனின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றியது ரஷ்யா : போரில் தொடரும் ரஷ்ய ஆதிக்கம் !
-
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!