Tamilnadu
பொது இடங்களில் கழிவுகளைக் கொட்டினால் அபராதம்! : உதவி எண்ணையும் அறிவித்தது சென்னை மாநகராட்சி!
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் சட்ட விரோதமாக குப்பைகள்/கட்டடக் கழிவுகளைக் கொட்டுவது மற்றும் கழிவுநீர்/கசடுகளை நீர்நிலைகள்/பொது இடங்களில் விடுவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கூடுதலாக, பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் கட்டடக் கழிவுகள், கழிவுநீர் மற்றும் குப்பை கழிவுகள் கொட்டுவது தொடர்பாக 1913 உதவி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
“பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டடக் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை சட்டவிரோதமாக பொது இடங்களில் கொட்டப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, தனியார் லாரி உரிமையாளர்கள்/தனிநபர்கள்/தனியார் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், அத்தகைய கழிவுகளை கொட்டுவதற்கென்றே, சென்னை மாநகராட்சியால் 15 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை பயன்பாட்டாளர்கள் பயன்படுத்திக்கொண்டு பொது இடங்களில் இத்தகைய கழிவுகளை கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும். மேற்குறிப்பிட்ட இவ்வசதிகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
இதுகுறித்த மேலும் விவரங்கள், சந்தேகங்கள் மற்றும் உதவிக்கு மாநகராட்சியில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களின் வழிகாட்டுதல்களை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், பொது இடங்களில் சட்ட விரோதமாக குப்பைகள்/கட்டடக் கழிவுகளை கொட்டுவது மற்றும் கழிவுநீர்/கசடுகளை நீர்நிலைகள்/பொது இடங்களில் விடுவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிக்கப்படும்.
இதுபோன்ற விதிமீறல்களை பொதுமக்கள் கண்டறிந்தால், அவர்களும் 1913 என்ற உதவி எண்ணில் புகார் அளிப்பதன் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
"பொது சிவில் சட்டம் ஒரு குறிப்பிட்ட மதத்தினரைப் பழிவாங்க கொண்டுவரப்படும் சட்டம்" - முரசொலி காட்டம் !
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?