Tamilnadu
”இந்திய ஒன்றியத்திற்கே முன்மாதிரியாகத் திகழும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம்” : துணை முதலமைச்சர் உதயநிதி
தமிழ்நாடு அரசு சார்பில் வாழ்ந்து காட்டுவோம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் உலக வங்கி துணையுடன், தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில், ஊரக நிறுவன மேம்பாடு, நிதியுதவியை அணுகும் வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துதல் வழியாக ஊரக சமூகங்களை நிலையாக மேம்படுத்தி, அதனால், செல்வவளத்தைப் பெருக்குவதன் மூலம், வறுமை ஒழிப்பையும் தாண்டிய மேம்படுத்தப்பட்ட நுட்பங்களைப் (வழிமுறைகள்) பயன்படுத்தி, ஊரகப்பகுதிகளின் மாற்றத்தை ஏற்படுத்துவதை முதன்மைத் தொலைநோக்காகக் கொண்டு செயல்படும் ஒரு புதுமையான திட்டம்.
இந்த திட்டத்தின் கீழ் 83,077 தனிநபர் பயனாளிகள்,1000 தொழிற்குக்கள், 5000 உற்பத்தியாளர் குழுக்கள் பயனடைந்து வருகிறது. மேலும் 53 உற்பத்தியாளர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. 1262 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கு International Finance Corporation-ன் பாராட்டு தெரிவித்துள்ளது. இதற்கு இந்திய ஒன்றியத்திற்கே முன்மாதிரியாக திராவிட மாடல் அரசின் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”புதிய திட்டங்களைத் தொடங்குவதில் மட்டுமல்ல, நடைமுறையில் இருக்கும் திட்டங்களை நேர்த்தியாக செயல்படுத்துவதிலும் நம் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, இந்திய ஒன்றியத்திற்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது.
அதற்குச் சான்றாக, கிராமங்களில் உள்ள மகளிர் தொழில் முனைவோராக உயர - பொருளாதார தன்னிறைவு பெற வழி வகை செய்து வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், International Finance Corporation-ன் பாராட்டைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் மகளிரின் மேம்பாட்டிற்காகச் செயல்படுத்தப்படும் திட்டங்களில் தலைசிறந்த திட்டமாக, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் அங்கீகரிக்கப்பட்டு இருப்பது, எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் நம் திராவிட மாடல் அரசுக்குக் கிடைத்துள்ள பெருமை.
இத்திட்டத்தின் வெற்றிக்காக உழைத்து வரும் அதிகாரிகள் - அலுவலர்களுக்கும், இதன் பயனாளிகளாக மட்டுமன்றி பங்கேற்பாளர்களாகவும் சாதனைப் படைக்கும் மகளிருக்கும் என் அன்பு நிறைந்த வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!