Tamilnadu

அமைச்சரவையில் புதிய திட்டங்களுக்கு ஒப்புதல்! : 46.9 ஆயிரம் வேலைவாய்ப்புகள் தரும் நிறுவனங்கள் விவரம் என்ன?

தமிழ்நாடு அமைச்சரவை இன்று (8.10.2024) ரூ.38,698.80 கோடி முதலீட்டிற்கான 14 புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முதலீடுகள் மூலம் 46,931 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது.

இம்முதலீடுகள் மின்னணு துறை சார்ந்த பிரின்டெட் சர்க்யூட் போர்டுகள் (PCB), குறைந்த மின்னழுத்த பேனல்கள், மொபைல் ஃபோன் தயாரிப்புகளுக்கான காட்சிமுறை உதிரிபாகங்கள் மற்றும் உறை தயாரித்தல், பயணிகள் சொகுசு வாகன உற்பத்தி, வாகனங்கள் சார்ந்த உதிரிபாகங்கள், உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் அதற்கான மென்பொருட்கள், பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்கள், மருத்துவத் துறை சார்ந்த ஊசி மருந்துகள் மற்றும் இதர மருந்துபொருட்கள் தயாரிப்பு, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி, எரிசக்தி துறை சார்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியுடன் பசுமை ஹைட்ரஜன் / பசுமை அம்மோனியா உற்பத்தி, மின்வாகனங்கள் மற்றும் தொலைதொடர்பு நெட்வொர்க்குகள் குறித்த ஆராய்ச்சி & மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு,

1. Freetrend Industrial India Pvt. Ltd. அரியலூர்

2. Grand Atlantia Panapakkam SEZ Developers Pvt. Ltd. இராணிப்பேட்டை

3. Kaynes Circuits India Pvt. Ltd காஞ்சிபுரம்

4. Ascent Circuits Pvt. Ltd. கிருஷ்ணகிரி

5. Leap Green Energy Pvt. Ltd தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, இராமநாதபுரம்

6. Tablets India Ltd செங்கல்பட்டு

7. Visteon Group காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர்

8. Lucas TVS Group சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி

9. Mahindra Electric Automobile Ltd. செங்கல்பட்டு, திருவண்ணாமலை

10. Nokia Solutions & Networks India Pvt. Ltd. காஞ்சிபுரம்

11. Rockwell Group காஞ்சிபுரம்

12. Super Auto Forge Pvt. Ltd. செங்கல்பட்டு, காஞ்சிபுரம்

13. Yuzhan Technology (India) Pvt. Ltd. காஞ்சிபுரம்

14. Tata Motors Ltd. இராணிப்பேட்டை

Also Read: 70-வது தேசிய திரைப்பட விழா : சிறந்த படம் முதல் இசை வரை... அதிக விருதுகளை பெறும் ‘பொன்னியின் செல்வன்’ !