Tamilnadu

”மகளிர் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் திராவிட மாடல் அரசு” : அமைச்சர் பொன்முடி பேச்சு!

புதுமைப் பெண் திட்டம், விடியல் பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களால் மகளிர் வாழ்க்கையில் முன்னேற்றத்தை திராவிட மாடல் அரசு ஏற்படுத்தி வருகிறது என வனத்துறை அமைச்சர் பொன்முடி பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி,”பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் அவர்கள் நினைத்ததை நிறைவேற்றி திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஆணும் பெண்ணும் சமம், அனைத்து சாதியினரும் சமம், அனைத்து மதத்தினரும் சமம் என்ற சமத்துவ உணர்வை வளர்ப்பதுதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்.

ஒரு காலத்தில் பஞ்சாயத்து தலைவராக முடியாத நிலையில், தலைவர் கலைஞர் பெண்களுக்காக 33% இட ஒதுக்கீடு வழங்கினார். இன்று 50% உயர்த்தி கொடுத்தவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதுதான் திராவிட மாடல்.

மாதந்தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். மகளிருக்கு இலவச பேருந்து பயணம், தமிழ் புதல்வன் திட்டம் மகளிர் முன்னேற்றத்திற்கான சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இன்று பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டை உற்சாகப்படுத்திக் கொண்டிருப்பவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். உலகத்திலேயே மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் துணை முதலமைச்சர். பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் தளபதி செயல்படுகிறாரோ அதே வழியில் நமது துணை முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்” என தெரிவித்துள்ளார்.

Also Read: ஹரியானா சட்டமன்றத் தேர்தல் : வினேஷ் போகத் வெற்றி... பாஜக வேட்பாளரை வீழ்த்தி அபாரம் !