Tamilnadu

சென்னை to மதுரை - நடு வானில் தொழில் நுட்ப கோளாறு : உயிர்தப்பிய 117 பயணிகள்!

சென்னையில் இருந்து மதுரை செல்லும் ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று மதியம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த விமானத்தில் 117 பயணிகள், 7 விமான ஊழியர்கள் மொத்தம் 124 பேர் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து விமானம் நடு வானில் பறந்து கொண்டு இருந்தபோது, தலைமை விமானியின் கட்டுப்பாட்டு அறைக்கு, விமானத்தில் மிகப்பெரிய அளவில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது என்று அபாய எச்சரிக்கை சிக்னல் வந்துள்ளது.

இதை அடுத்து பரபரப்படைந்த தலைமை விமானி, அவசர அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதை அடுத்து, சென்னை விமான நிலையத்தில், விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் துரிதமாக செய்யப்பட்டுன. அதன்பின்பு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வந்து பத்திரமாக தரையிறங்கியது.

இதை அடுத்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து அவசரமாக கீழே இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பயணிகள் அனைவரையும் மாற்று விமானம் மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு குறித்து விமானிக்கு தகுந்த நேரத்தில், தகவல் கிடைத்ததால், விமானி எடுத்த துரித நடவடிக்கையால், விமானம் மிகப்பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்து, நல்வாய்ப்பாக 124 பேர் உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.