Tamilnadu

“ஆய்வுக்கு தயாரா?” - தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால் !

சென்னை அடையாறு நகர்புற சமுதாய நல மையத்தில், சட்டப்பேரவையில் அறிவித்த குழந்தை நலத்திட்டங்களின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு இந்த குழந்தை நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா, மண்டல குழு தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ச்சியாக ஆரம்பகால குழந்தை வளர்ச்சிக்கான பெற்றோர் பயன்பாட்டு செயலியையும், பிறப்புற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பிறவி குறைபாடுகளை கண்டறிய முழுமையான உடற்பரிசோதனையை கருவுற்ற பெண்களுக்கு மேற்கொள்ளும் அடையாள அட்டையையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “இந்திய வரலாற்றில் முதல் முறையாக குழந்தைகளுக்கான மிக முக்கியமான 4 புதிய அறிவிப்புகளை இன்றைக்கு தொடங்கி வைத்திருக்கிறோம். ஏற்கனவே குழந்தை இறப்பு விகிதத்திலும், மகப்பேறு காலங்களில் தாய்மார்கள் இறக்கும் விகிதத்திலும் மிகப்பெரிய அளவில் சாதனையை எட்டிக் கொண்டிருக்கிறது. இந்த திட்டங்கள் மூலம் நிச்சயம் அது மேலும் அதிகரிக்கும்.

நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, DPT தடுப்பு ஊசி பற்றி பேசி இருக்கிறார். குழந்தைகள் நலன் பற்றி அவர் அக்கறை கொண்டிருக்கிறார். அவருக்கு இதுபோன்ற சமயங்களில் ஆவது குழந்தைகள் பற்றிய ஒரு நல்ல எண்ணம் உள்ளத்தில் உதித்திருக்கிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி. அதை எப்படி நேற்று இரவு வந்தது என தெரியவில்லை.

நான்கு குழந்தைகள் நலத்திட்டங்களை செயல்படுத்தப்படும் என அறிந்து தெரிவித்தாரா என தெரியவில்லை. எப்படியோ ஒரு நல்ல காரியத்தை செய்து இருக்கிறார். DPT தடுப்பூசி தமிழ்நாட்டில் 2024 2025 ஆம் ஆண்டில் 8 லட்சத்து 79 ஆயிரம் குழந்தைகள் பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் மொத்தத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் ஆக சேர்த்து 9 லட்சம் 35 ஆயிரம் என 5 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளிட்ட குழந்தைகள் 20 லட்சத்துக்கு 17 ஆயிரம் தடுப்பூசிகள் ஒரு ஆண்டுக்கு வேண்டும்.

தடுப்பூசி எதுவாக இருந்தாலும் ஒன்றிய அரசு வழங்குவது தான் வழக்கம். மொத்தமாக 13 வகையான தடுப்பூசிகளை பயன்படுத்தி வருகிறோம். தடுப்பூசியை பொறுத்தவரை ஒன்றிய அரசுதான் இதை வழங்கி வருகிறது. தடுப்பூசி என்பது ஐந்து லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு இருந்தது. தடுப்பூசி காலியாகும்போது மூன்று முறை டி பி ஹெச் இடமிருந்து ஒன்றிய அரசிற்கு கடிதம் அனுப்பப்பட்டது. தடுப்பூசி இருப்பு குறைந்து வருகிறது. தடுப்பூசிகளை உடனடியாக அனுப்ப வேண்டும் என மூன்று முறை ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்.

எடப்பாடி போல யாரோ எழுதிக் கொடுத்து நேற்று வந்து சொன்னது மாதிரி அல்ல. தொடர்ச்சியாக செய்து கொண்டு இருக்கிறோம். ஒன்றிய அரசும் 20 லட்சம் தடுப்பூசி தர வேண்டும். 9 லட்சம் தடுப்பூசி கொடுத்து இருக்கிறார்கள். இன்னும் காலம் இருக்கிறது. கொடுத்து இருப்பார்கள் இப்போது கையிருப்பு என இல்லை என சொல்லியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி எந்த சென்டரில் வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம். அவரை நேரடியாக அழைத்து சென்று காட்டுவதற்கு DPH தயாராக இருக்கிறது. மூன்று லட்சம் தடுப்பூசிகள் கையை இருப்பில் உள்ளது. தடுப்பூசியே இல்லை குழந்தைகள் தடுப்புச் இல்லாமல் அல்லல்படுகிறார்கள் என சொல்லி இருக்கிறார். எந்த குழந்தை வந்து இந்த குழந்தையிடத்தில் (எடப்பாடி பழனிசாமி) சொன்னது என்று தெரியவில்லை. 3,26,000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.

பருவ மழைக்காலத்தின் போது காய்ச்சல் வருவது வழக்கமான ஒன்று. வட கிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்க உள்ளது. பொதுவாக இந்த டெங்கு என்பது, இன்று - நேற்று இல்லை. உலகம் முழுவதும் இருக்கிறது. அதிகமான டெங்கு இழப்புகள் தமிழ்நாட்டில் வரலாற்றில் 2012 ஆம் ஆண்டு 66 டெங்கு இழப்புகளும், 2017 ஆம் ஆண்டு 65 இறப்புகள் அதன் பிறகு ஓர் இலக்கத்தில் தான் உள்ளது.

கடந்த காலங்களில் அரசு மருத்துவமனைகளில் வந்தவர்களுக்குதான் டெங்கு பாதிப்பு எவ்வளவு என்பது தொடர்ந்து வெளியிடப்பட்டிருந்தது. தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்புக்கு உள்ளானவர்களை அந்த அளவுக்கு கவனிப்பதில்லை. ஆனால் தற்போது அனைத்து மருத்துவமனைகளிலும் யாருக்கெல்லாம் டெங்கு பாதிப்பு இருக்கிறது என்பதை தனியார் மருத்துவமனைகளிலும் கணக்கெடுக்கப்பட்டு அறிவித்து கொண்டு இருக்கிறோம்.

அந்த வகையில் கடந்த ஆண்டு எங்கும் மதிப்பு அதிக மனது உடனடியாக எப்போதும் இல்லாத அளவுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி மட்டுமல்ல அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் ஊராட்சி மக்கள் நல்வாழ்வுத்துறை மாவட்ட அளவிலான கூட்டங்கள் போட்டு டெங்குவை கட்டுப்படுத்துவது டெங்கு இறப்பது குறைப்பது என்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மூன்று நான்கு சேர்ந்து அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் டெங்கு வீரியம் அடைந்து வருகிறது. 2017 வீரியமிக்க டெங்குவாக இருந்து அப்போது 65 பேர் இறந்து போனபோது சாட்சாத் எடப்பாடி முதலமைச்சராக இருந்தார். அப்போது டெங்கு பத்தி அவருக்கு ஒண்ணுமே தெரியாது டெங்குன்னா என்னவென்று தெரியாது.

எப்போதும் ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒரு முறையும் அது அதிகரிப்பதால் கடந்த ஆண்டு டெங்கு வீரியத்தை கண்டுபிடிப்பதற்காக ஆய்வகத்தை தொடங்கணும் என முடிவு எடுத்து, கொரோனாவுக்கு என தொடங்கி ஆய்வகத்தை டெங்கு வெளியேற்றத்தை கண்டுபிடிப்பதற்காக ஆய்வகமாக இந்தியாவில் முதல் முறையாக டெங்குவை கண்டுபிடிப்பது வேறு டெங்குவின் வீரியத்தை கண்டுபிடிப்பது வேறு என்பதற்கான பகுப்பாய்வை தயாரித்து இருக்கிறோம்.

அமெரிக்காவிலிருந்து வேதிப்பொருட்கள் வரவழைத்து மிக விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. டெங்கு குறித்த விழிப்புணர்வு இந்த அரசுக்கு இருக்கிறது. இதுவரை இந்த ஆண்டில் டெங்கு இழப்புகள் என்பது ஏழு என உள்ளது. இன்னும் இரண்டு மாதம் மட்டுமே உள்ளது. இந்த இரண்டு மாதமும் வடகிழக்கு பருவமழை ஏழு இறப்புகளும் கூட அதிகமான உடல் நோய் எதிர்ப்பு சத்து இல்லாதவர்களும், மருத்துவத்திற்கு வராமல் வீடுகளிலே சிகிச்சை பெறுவது, காய்ச்சல் பாதிப்பு வந்தால் உடனடியாக மருத்துவர்கள் அணுகாமல் இருந்தது, அவர்கள் தான் இந்த ஏழு இறப்புக்கும் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் டெங்கு குறித்து கவலை கொள்ளாமல் இருந்தது தான் 65 இழப்புக்கு காரணமாக இருந்தது. குக்கிராமங்கள் மலை கிராமங்களில் இன்டர்நெட் வசதி இல்லாமல் இருந்தால் அவர்கள் சென்று கண்காணிப்பார்கள் கையெடுக்க அதற்கு தான் கொடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.

Also Read: சட்டப்பேரவையில் அறிவித்த குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள் தொடக்கம்... முழு விவரம் !