Tamilnadu

வடகிழக்கு பருவமழை - மக்களுடன் துணை நிற்போம் : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!

வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட அதிகம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுததுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் ஆய்வறிக்கை கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது, மழைநீர் தேங்காமல் இருக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மேலும், பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

அதோடு, இயற்கை பேரிடரின்போது ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்த வேண்டும் . தன்னார்வலர்கள், எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைத்து whatsapp குழு ஏற்படுத்திட வேண்டும்.

பழமையான கட்டடங்களில் வாழும் மக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திட வேண்டும். தாழ்வான பகுதியில் உள்ள மின் பெட்டிகளை உயர்த்தி வைக்க வேண்டும். மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அரசு அதிகாரிகள் எப்போதும் மக்களுடன் துணை நிற்கிறார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

Also Read: ”வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மின்துறை தயார்” : அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!