Tamilnadu
சட்டப்பேரவையில் அறிவித்த குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள் தொடக்கம்... முழு விவரம் !
சென்னை அடையாறு நகர்புற சமுதாய நல மையத்தில், சட்டப்பேரவையில் அறிவித்த குழந்தை நலத்திட்டங்களின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு இந்த குழந்தை நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா, மண்டல குழு தலைவர் துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ச்சியாக ஆரம்பகால குழந்தை வளர்ச்சிக்கான பெற்றோர் பயன்பாட்டு செயலியையும், பிறப்புற்ற அனைத்து குழந்தைகளுக்கும் பிறவி குறைபாடுகளை கண்டறிய முழுமையான உடற்பரிசோதனையை கருவுற்ற பெண்களுக்கு மேற்கொள்ளும் அடையாள அட்டையையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “2024 - 2025 ஆம் ஆண்டு மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கை போது 110 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட 110 அறிவிப்புகளில் தொடர்ச்சியாக ஒவ்வொன்றாக செயல்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று நான்கு அறிவிப்புகள் இங்கே செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.
நான்கு அறிவிப்புகளை பொறுத்தவரை, பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் பிறவி குறைபாடுகளை கண்டறிந்து முழுமையான உடல் பரிசோதனைகளை செய்வதற்கு அரசு மருத்துவமனைகளில் ஆயிரம் இடங்களில் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. அனைத்து குழந்தைகளுக்கும் பிரத்யேக அடையாள அட்டைகள் (Child Health Card) என்கின்ற வகையில், அடையாள அட்டைகள் தரும் பணிகள் இந்த ஆயிரம் மருத்துவமனையில் வழங்கும் திட்டத்தையும் இன்று தொடங்க உள்ளோம்.
இது மட்டுமல்லாமல் பச்சிளம் குழந்தையின் வளர்ச்சி மற்றும் நலத்தை கண்காணிப்பதற்காக சிறப்பு மையங்கள் ஹெல்த் பேபி கிளினிக் (Health Baby Clinic) என்கின்ற வகையில் 400 இடங்களில் தமிழ்நாட்டின் இந்த ஹெல் பேபி கிளினிக் சிறப்பு மையங்களையும் இங்கிருந்து தொடங்கி வைத்து இருக்கிறோம். இதன் மூலம் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பிறவி குறைபாடுகளை கண்டறிவது.
அதனை ஆரம்பகட்டங்களிலே கண்டறியப்பட்டு குறைபாடுகளை தீர்வு காண்பது வளர்ச்சி குறைபாடுகள், செவித்திறன் குறைபாடுகள், பார்வை குறைபாடுகள் போன்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த குழந்தைகள் இயல்பாக வாழுவும் வளரும் நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறோம்.
மேலும் ஒரு திட்டமானது ரூ.1 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவில் குறை பிரசவத்தில் எடை குறைவாக பச்சிளம் குழந்தை பராமரிக்கும் மையங்கள் சிறப்பு பச்சிளம் பராமரிப்பு மையங்கள் அந்த மையங்களில் இருந்து விடுபடும் குணமாகி இல்லங்களுக்கு செல்லும் குழந்தைகளை தொழில்நுட்ப உதவியோடு கண்காணிப்பதற்கு முன்னோடி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இந்த திட்டம் அமலுக்கு வந்திருக்கிறது.
இந்த திட்டத்தின் மூலமாக பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு வீட்டில் இருந்தபடியே சுவாசம், இதயத் துடிப்பு போன்றவற்றை 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்களால் கவனிக்க முடியும். இந்த கருவி மருத்துவர்களுக்கு ஏதாவது அபாய எச்சரிக்கையை அளிக்குமானால் உடனடியாக மருத்துவர்கள் அந்த குழந்தைகளை கண்டறிந்து தேவையான சிகிச்சைகளை அளித்து காப்பாற்றிட முடியும்.
இது மட்டுமல்லாமல் ரூ.1 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் பாதுகாப்பான மற்றும் சுகப்பிரசவத்தை ஊக்குவிக்கும் வகையில் உறுதிப்படுத்துகிற வகையில் இந்திய மருத்துவ முறையுடன் ஒருங்கிணைந்து செவிலியர்களுக்கு ஏற்கனவே பயிற்சி தரப்பட்டு யோகா பயிற்சிநர்கள் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் செவிலியர்களுக்கு உயர் பயிற்சி அளிப்பதும் செவிலியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விரிவான பயிற்சி கையேடு ஒன்று தயாரித்து அவைகள் வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான திட்டத்தையும் தொடங்கி வைத்திருக்கிறோம்.
மேலும் மிக முக்கியமான அறிவிப்பு ஆரம்பகால குழந்தை வளர்ச்சிக்கான பெற்றோர் பயன்பாட்டு செயலி என்கின்ற ஒரு செயலியை உருவாக்கி அந்த செயலி இன்றிலிருந்து அமலுக்கு வருகிறது. இதில் சுகாதாரத்துறை செய்திகள், கருவுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான செய்திகள், கருப்பம் மற்றும் பிரசவக காலம் பற்றிய செய்திகள், பிரசவத்திற்கு பிறகு கவனிப்பு மற்றும் பிறந்த குழந்தையின் வளர்ச்சி பற்றிய கண்காணிப்பு செய்திகள், குழந்தை பராமரிப்பு பற்றி தெரிந்து கொள்வது, தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்வது, இப்படி பல்வேறு விஷயங்கள் அறிந்து கொள்வதற்கு இந்த செயலி உதவியாக இருக்கும் அதையும் இன்று தொடங்கி வைத்திருக்கிறோம்.
தமிழக வரலாற்றின் இந்திய வரலாற்றில் முதல் முறையாக குழந்தைகளுக்கான மிக முக்கியமான நான்கு புதிய அறிவிப்புகளை இன்றைக்கு தொடங்கி வைத்திருக்கிறோம். இந்த திட்டங்கள் மூலம் நிச்சயம் தமிழ்நாடு ஏற்கனவே குழந்தை இறப்பு விகிதத்திலும், மகப்பேறு காலங்களில் தாய்மார்கள் இறக்கும் விகிதத்திலும் மிகப்பெரிய அளவில் சாதனையை எட்டிக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் ஏற்கனவே 2020க்கு முன்னால் ஓராயிரம் குழந்தைகள் பிறந்தால் அதில் குழந்தைகள் இறப்பு 13% இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தத் துறையின் துரிதமான செயல்பாடுகள் காரணமாக, 10.2 விகிதமாக எட்டியது. அது இந்த ஆண்டு 8%-க்கு வந்திருக்கிறது. இது ஆயிரம் குழந்தைகளுக்கு 8 என்ற அளவிலும் இதுவே தேசிய அளவில் 28 என்கின்ற அளவில் இருந்து கொண்டிருக்கிறது.
ஆயிரம் குழந்தைகள் பிறக்கும்போது 28 இழப்புகள் பதிவாகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அது 8 என்ற அளவில் குறைந்து இருக்கிறது. அது பூஜ்ஜியம் என்ற நிலைக்கு செல்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். 2024 ஏப்ரல் தொடங்கி ஆகஸ்ட் 24 வரை சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு ஒன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மகப்பேறு தாய்மார்களின் இறப்பு விகிதம் ஒரு லட்சத்திற்கு இந்திய அளவில் 97 ஆக இருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டில் 70-ற்கு மேற்பட்ட விகிதம் இருந்தது. அது தற்பொழுது படிப்படியாக குறைந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னால் 54, 55 கடந்த ஆண்டு 45 இந்த ஆண்டு அது 40.2 ஆக குறைந்துள்ளது. இப்படி படிப்படியாக குழந்தை இறப்பு விகிதமும், மகப்பேறு தாய்ப்பால் இறப்பு விகிதமும் பெரிய அளவில் குறைந்து சாதனை படைத்து வருகிறது. இந்த இரண்டு இறப்பு விகிதங்களும் பூஜ்ஜிய நிலைக்கு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.” என்றார்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!