Tamilnadu
சென்னை மக்கள் கவனத்திற்கு - நாளை போக்குவரத்து மாற்றம் : முழு விவரம் இதோ!
மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளிக்க உள்ளனர். இதனால் சென்னை மெரினாவை ஒட்டிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் மற்றும் பார்க்கிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டு போக்குவரத்து காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பார்க்கிங் ஏற்பாடுகளுக்கு ஆர்.கே.சாலைக்குப் பதிலாக வாலாஜா சாலையைப் பயன்படுத்த வேண்டும்.
திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் இலக்கை அடைய சர்தார் படேல் சாலை காந்தி மண்டபம் சாலை அண்ணா சாலையைப் பயன்படுத்த வேண்டும்.
இதேபோல், பாரிஸில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, அவர்கள் தங்களுடைய இலக்கை அடைய அண்ணாசாலை தேனாம்பேட்டை காந்தி மண்டபம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
அண்ணா சிலையிலிருந்து MTC பேருந்துகள் வாலாஜா சாலை, திருவல்லிக்கேனி நெடுஞ்சாலை ரோடு, ரத்னா கஃபே சந்திப்பு, ஐஸ் ஹவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம். தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
இதேபோல் கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி RA புரம் 2வது பிரதான சாலை TTK சாலை RK சாலை அண்ணாசாலையை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சிகளை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு, காமராஜர் சாலை, சாந்தோம் சாலை, ஆர்.கே.சாலை, வாலாஜா சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகன நிறுத்துமிடங்கள் காலை 9.30 மணிக்கு மூடப்படும் என்றும் வாகனங்களில் வரும் பார்வையாளர்கள் கூடிய விரைவில் வருமாறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் மக்கள் கூட்டம் மற்றும் வாகனங்களின் அடர்த்தி காரணமாக, நாளை சென்னை முழுவதும் சிரமமில்லாமல் பயணிக்க, MTC பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் மற்றும் MRTS ரயில்கள் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
MTC சிற்றூந்துகள் மூலம் அண்ணாசாலை மெட்ரோவில் இருந்து சிவானந்தா சாலையில் டிவி ஸ்டேசன் வரையிலும், வாலாஜா ரோட்டில் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு வரையிலும், ஆர்.கே சலையில் வி.எம் தெரு சந்திப்பு வரையிலும் மாநகர பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!