Tamilnadu
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : 5000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52 வயது) கடந்த 05.07.2024 அன்று மாலை கொலை செய்யப்பட்டார். இது குறித்து K-1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு துரித விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கு.ஹரிகரன்,மலர்கொடி, சதீஷ்குமார்,கோ.ஹரிஹரன், அஞ்சலை, சிவா,பிரதீப், முகிலன், விஜயகுமார் (எ) விஜய், விக்னேஷ் (எ) அப்பு, அஸ்வத்தாமன், பொற்கொடி,ராஜேஷ், செந்தில்குமார் (எ) குமரா, கோபி உள்ளிட்ட 25 குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 30 செம்பியம் தனிப்படை போலிஸார் 5000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக வேலூர் மத்திய சிறையில் உள்ள நாகேந்திரன் மற்றும் சம்பவம் செந்தில் ஆகியோர் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக போலீசார் தரப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், இந்த கொலை வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான சம்பவம் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரின் பெயரை சேர்த்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தீபாவளி... 108 அவசார கால மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு !
-
கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை : சென்னையில் மோசமடைந்த காற்று மாசு !
-
வெப்ப அலைகள் குறித்து ஐ.நா-வின் பகிரங்க எச்சரிக்கை... உடனடியாக பேரிடராக அறிவித்த தமிழ்நாடு அரசு!
-
”தீபாவளியை கொண்டாட மகிழ்ச்சியாக பயணிக்கும் மக்கள்” : அமைச்சர் சிவசங்கர் பேட்டி!
-
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்ன?: முழு விவரம் இங்கே!