Tamilnadu

ஈசா யோகா மையத்தில் அதிகாரிகள் விசாரணை! : சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து நடவடிக்கை!

சென்னை உயர்நீதிமன்றத்தில், பெண்களை ஈசா யோகா மையத்தில் துறவியாக மாற்றுவதாகவும், உறவினர்களை சந்திக்க அனுமதி மறுப்பதாகவும் பேராசிரியர் காமராஜர் மனு தாக்கல் செய்திருந்தார்

ஈசா யோகா மையத்தில் பல்வேறு குற்ற சம்பவம் நடப்பதாக விமர்சித்த காமராஜர், மருத்துவர் ஒருவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்து இருந்தார்.

குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மனுதாரர் மற்றும் வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஈசா மையத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மை, நீதிமன்றத்தில் சாட்சி கூறிய இரு பெண்கள் பேசிய விதத்தை பார்க்கும் போது, குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள்ள உண்மை தன்மை தெரிந்து கொள்ள விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

ஈசா மையத்துக்கு எதிராக பதிவான குற்ற வழக்குகளின் விவரங்கள், மனுதாரரும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞரும் தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

ஈசா யோகா மையத்துக்கு எதிரான வழக்குகளை கைவிடும் வரை இளைய மகள் லதா சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக, மனுதாரர் காமராஜருக்கு மொபைல் போனின் வாயிலாக மூத்த மகள் கீதா தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

அதன் அடிப்படையில் ஈசா யோகா மையத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: 1200 ஆண்டுகள் பழமையான மசூதி இடிப்பு : பா.ஜ.க ஆட்சி நடக்கும் குஜராத்தில் புல்டோசர் அராஜகம்!