Tamilnadu

விளையாட்டினை வளர்க்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது - துணை முதலமைச்சர் உதயநிதி !

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் முன்னாள் டென்னிஸ் விளையாட்டு வீரர் விஜய் அமிர்தராஜ் பெயரிலான பார்வையாளர் மாடத்தினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்திய டென்னிஸ் உலகின் அசைக்கமுடியாத வீரராக திகழ்ந்த விஜய் அமிர்தராஜ் பெயரை இந்த மாடத்துக்கு வைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சாதனையாளர்களை என்றுமே திராவிட மாடல் அரசு கொண்டாட்ட தவறியதில்லை.

அவருடைய சாதனை எடுத்துச்சொல்லும் வகையில் பார்வையாளர் மாடத்திற்கு பெயர் வைத்ததில் பெருமை கொள்கிறோம்..இன்று டென்னிஸ் நிறையை பேர் விளையாடுகிறார்கள் ,தொலைக்காட்சியில் காணுகிறார்கள் என்றால் காரணம் விஜய் அமிர்தராஜ் அவர்கள் தான்.

அர்ஜுனா விருது, பத்ம விருதினை வென்றுள்ள அவர் விளையாட்டு வீரராக மட்டுமல்ல ஆகச்சிறந்த மனிதராக கொண்டாடப்படவேண்டும். டென்னிஸ் விளையாட்டினை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி விளையாட்டுகளை வளர்க்க செஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா, பார்முலா 4 கார் பந்தயம் என பல்வேறு சிறப்பான போட்டிகளை தமிழ்நாடு அரசு நடத்தியுள்ளது” என்று கூறினார்.

Also Read: ஒன்றிய அரசை கண்டித்து லடாக்கில் முழு அடைப்பு... தன்னாட்சி கோரி போராட்டம்... முழு விவரம் என்ன ?