Tamilnadu
5 காவலர்களுக்கு ‘காந்தியடிகள் காவலர் விருது’ அறிவிப்பு - யார் யாருக்கு விருது? எப்போது வழங்கப்படும்?
ஆண்டுதோறும் மதுவிலக்கு உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக செயல்படும் 5 காவல்துறை பணியாளர்களுக்கு ‘காந்தியடிகள் காவலர் விருது’ அறிவிக்கப்படும். காந்தி ஜெயந்தியை (அக்.2) முன்னிட்டு ஆண்டுதோறும் அக்.1-ம் தேதி அறிவிக்கப்படும் இந்த விருதானது, குடியரசுத் தினத்தன்று முதலமைச்சரால் வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான (2024) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு வருமாறு :
“முதலமைச்சர் அவர்கள், மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக,
பெ.சின்னகாமணன், காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு விழுப்புரம் மண்டலம்,
கி.மகாமார்க்ஸ், தலைமை காவலர்-1989, விழுப்புரம் தாலுகா சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம்,
க.கார்த்திக், தலைமை காவலர்-2963, துறையூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, திருச்சி மாவட்டம்,
கா.சிவா, இரண்டாம் நிலை காவலர்-1443, ஆயுதப்படை, சேலம் மாவட்டம் மற்றும்
ப.பூமாலை, இரண்டாம் நிலை காவலர் 764, ஆயுதப்படை, சேலம் மாவட்டம்,
- ஆகியோருக்கு 2024-ஆம் ஆண்டுக்கான ‘காந்தியடிகள் காவலர் விருது’ வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.
இவ்விருது, முதலமைச்சர் அவர்களால் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி, குடியரசு தினத்தன்று வழங்கப்படும். மேலும் இந்த விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40,000/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
”கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு கூட்டுறவுத்துறை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !
-
எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளன? : அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!