Tamilnadu
கடந்த ஆண்டை விட 5% குறைந்த சாலை விபத்து மற்றும் இறப்பு வழக்குகள் - காவல்துறை அறிக்கை!
சென்னையில் அபாயகரமான சாலை விபத்து மற்றும் இறப்பு வழக்குகள் கடந்த ஆண்டை விட 5% குறைந்துள்ளதாக காவல்துறை அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. அந்த அறிக்கை வருமாறு :
போக்குவரத்து மற்றும் சாலை தடுப்பதற்காகவும் மக்களின் உயிர் பாதுகாப்பு பிரிவில் 60,060 விபத்துக்களை காப்பதற்காகவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஏதிராக வழக்கு பதிவு செய்தல், தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் ஈடுப்படுத்துதல், விபத்து நடக்கக்கூடிய இடங்கனை ஆராய்ந்து அதனை சரி செய்தல் ஆகிய நடவடிக்கைகள் மாநிலத்தில் போக்குவரத்து மற்றும் சாலை விபத்துக்களை குறைப்பதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன.
2024-ஆம் வருடம் ஜீலை மாதம் வரை 10,066 மரண விபத்து வழக்குகளில் 10,536 பேர் இறந்துள்ளார்கள். இதே காலகட்டத்தில் 2023-ஆம் ஆண்டு ஜீலை மாதம் வரை 10,589 மரண விபத்து வழக்குகளில் 11,106 பேர் இறந்துள்ளார்கள். இது தொடர்பாக காவல்துறையினரால் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையால் 523 (5%) மரண விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக 570 உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன (இறப்பவர்களின் எண்ணிக்கையில் 5% குறைந்துள்ளது).
2024-ஆம் வருடம் ஜீலை மாதம் வரை ஆறு தலைப்புகளின் (61) கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்கள் மீது 1,05,097 வழக்குகளும், சிவப்பு விளக்கு சமிக்கைகளை மீறியவர்களின் மீது 1,35,771 வழக்குகளும், வாகனங்களை ஓட்டும் போது கைபேசிகளை பயன்படுத்திய நபர்களின் மீது 2,31,624 வழக்குகளும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய நபர்களின் மீது 1,13,270 வழக்குகளும், அதிக பளு ஏற்றிய சரக்கு வாகனங்களின் மீது 6,946 வழக்குகளும், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிய வாகனங்களின் மீது 74,013 வழக்குகளும் ஆக மொத்தம் ஆறு தலைப்புகளின் கீழ் 6,66,721 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கூடுதலாக இரண்டு தலைப்புகளின் (2H) கீழ் தலைக்கவசம் அணியாமல் இரண்டு சக்கர வாகனம் ஓட்டிய மற்றும் பின்னால் இருந்த நபர்களின் மீது 35,78,763 வழக்குகளும், இருக்கை பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிய நபர்களின் மீது 3,39,434 வழக்குகளும் ஆக மொத்தம் 39,18,197 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மோட்டார் வாகன விதிகனை மீறியதாக இந்த வருடத்தின் ஜீலை மாதம் வரை 76,15,713 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மோட்டார் வாகன விதிகளை மீறிய 1,82,375 நபர்களுடைய ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்வதற்காக வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு (RTO) பரிந்துரை செய்து அனுப்பப்பட்டுள்ளது.
=> நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தின் செயல்திறன் :
218 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை முழுவதையும் மற்றும் மாநில நெடுஞ்சாலையின் சில முக்கிய பகுதிகளையும் உள்ளடக்கியது. போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவில் சாலை விபத்துக்களை தடுப்பதற்காகவும் மக்களின் உயிர்காப்பதற்காகவும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் 2024-ஆம் வருடம் ஜீலை மாதம் வரை நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தால் சாலை விபத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை உயிர்காக்கும் நேரத்தில் 8,809 நபர்களை தக்க நேரத்தில் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைத்து உயிரை காப்பாற்றி உள்ளனர்.
நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மொத்தமாக சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட 14,957 நபர்களுக்கு உதவி செய்துள்ளனர். நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களின் குறிப்பிடத்தக்க மீட்பு முயற்சிகள் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
=> மீட்பு பணி :
காஞ்சிபுரம் மாவட்டம், 30.07.2024 அன்று காலை, 6:00 மணியளவில், சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாநில நெடுஞ்சாலையில் பழைய சீவேரம் அருகே விபத்து ஏற்பட்டது. சாலவாக்கம் நோக்கிச் சென்ற மணல் லாரி, அதே வழியில் வந்த மற்றொரு லாரி மீது பின்னால் மோதியது. நெடுஞ்சாலை ரோந்து வாகனம் உடனடியாக எஸ்ஓசிக்கு விரைந்தது. காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது மற்றும் சாலையில் போக்குவரத்தை சீரமைத்து வாகனங்களை அனுமதித்தது.
நாகப்பட்டினம் மாவட்டம். கீழ்வேளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருக்கண்ணங்குடி பைபாஸ் சாலையில், 06.07.2024 அன்று காலை 6:00 மணியளவில், சரக்கு வேனும், காரும் மோதி விபத்துக்குள்ளானது. நெடுஞ்சாலை ரோந்து வாகனம் உடனடியாக சம்பவ இடத்தை அடைந்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சாலையில் போக்குவரத்தை சீர் செய்தது.
=> சாலை பாதுகாப்பில் பொது மக்களுக்கான விழிப்புணர்வு முகாம்:
சாலை பாதுகாப்பில் உள்ள மூன்று தூண்கள்: சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு, விதிகளை அமல்படுத்துதல் மற்றும் IEC (நிறுவன கல்வி பிரச்சாரம்) மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் சிறு வயதிலேயே அறிவைப் புகுத்துதல்" என்ற கருத்து, சாலைப் பயணிகளிடையே, குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு போக்குவரத்து விதிகள் மற்றும் அவற்றை மீறுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்படுகிறது. அதிவேகத்தால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதன் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது.
பேருந்து ஓட்டுநர்கள். ஆட்டோ ஓட்டுநர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து சிக்னல்களில் ஹாட்ஸ்பாட் கல்வி மற்றும் போக்குவரத்து பூங்காக்களுக்குச் செல்லும் போது துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் ஆகியவை இதில் அடங்கும். அனைத்து சாலைப் பயனாளர்களையும் இலக்காகக் கொண்டு மல்டிமீடியா விழிப்புணர்வு பிரச்சாரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் சாலை போக்குவரத்து ஆணையம் (RTA) ஏற்பாடு செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் (ஜூலை வரை). 44,408 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம், 19,31,225 பேருக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காவல்துறையின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும், மற்ற துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, மரன விபத்துகளைக் குறைப்பதற்கும் விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பதற்கும் பங்களித்துள்ளன.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!